டிங்கிரி டுல்மா
டிங்கிரி டுல்மா
தேவையானவை:
மஷ்ரூம் - 200 கிராம் (இரண்டாக நறுக்கவும்)
பெரிய வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கவும்)
தக்காளி - 2 இஞ்சி-பூண்டு விழுது - ஒரு டேபிள்ஸ்பூன்
பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் - ஒரு டீஸ்பூன்
சீரகம் - ஒரு டீஸ்பூன்
மஞ்சள்தூள்- சிறிதளவு
மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன்
மிளகுத்தூள் - அரை டீஸ்பூன்
கரம்மசாலாத்தூள் - அரை டீஸ்பூன்
கொத்தமல்லித்தழை - தேவையான அளவு
துருவிய பனீர் - 100கி
உப்பு - தேவையான அளவு
வெண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன்
முந்திரிப் பருப்பு பேஸ்ட் - ஒரு டேபிள்ஸ்பூன்
செய்முறை:
அடுப்பில் வாணலியை வைத்து வெண்ணெய் சேர்த்து சூடானதும், சீரகம், வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி-பூண்டு விழுது, முந்திரிப் பருப்பு பேஸ்ட் சேர்த்து வதக்கவும். இதில் தக்காளி, மிளகுத்தூள் கரம்மசாலாத்தூள், மிளகாய்த்தூள், மஞ்சள்தூள், நறுக்கிய மஷ்ரூம், சேர்த்துக் கிளறி இரண்டு நிமிடம் மிதமான தீயில் வேகவிடவும். கலவை வெந்து கொதிக்கும் பதம் வரும் போது, உப்பு, துருவிய பனீரைச் சேர்க்கவும். கொத்தமல்லித்தழையை தூவி இறக்கிப் பரிமாறவும்.

No comments:
Post a Comment