Thursday, 6 October 2016

சில்லி மஷ்ரூம்

சில்லி மஷ்ரூம்

சில்லி மஷ்ரூம்

 

தேவையானவை:

 

மஷ்ரூம் - 200 கிராம் (இரண்டாக நறுக்கவும்)

வெங்காயம் - 1 (க்யூப்களாக நறுக்கவும்)

நறுக்கிய பூண்டு-  ஒரு டேபிள்ஸ்பூன்

பச்சை மிளகாய் - 2 (பெரிதாக நறுக்கவும்)

நறுக்கிய இஞ்சி - ஒரு டேபிள்ஸ்பூன்

குடமிளகாய் -  1 (க்யூப்களாக நறுக்கவும்)

ரெட் சில்லி சாஸ் - ஒரு டேபிள்ஸ்பூன்

ஸ்பிரிங் ஆனியன் - தேவையான அளவு

சோள மாவு - ஒரு டேபிள்ஸ்பூன்

மைதா மாவு - அரை  டேபிள்ஸ்பூன்

சோயா சாஸ் - இரண்டு சொட்டு

வெள்ளை மிளகுத்தூள் - ஒரு டீஸ்பூன்

எண்ணெய் - தேவையான அளவு

உப்பு - தேவையான அளவு

வினிகர்- ஒரு டீஸ்பூன்

 

செய்முறை:

 

ஒரு பாத்திரத்தில் சோளமாவு, மைதாமாவு, உப்பு, வெள்ளை மிளகுத்தூள், சோயா சாஸ் ஆகியவற்றைச் சேர்த்துக் கிளறிக்கொள்ளவும். இதில் மஷ்ரூமை சேர்த்துப் புரட்டி எண்ணெயில் பொரித்து எடுத்துக்கொள்ளவும். அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் விட்டு சூடாக்கி, பூண்டு, இஞ்சி, பச்சை மிளகாய் போட்டு வதக்கவும். இதில் வெங்காயம், குடமிளகாய், வினிகர் சேர்த்து, கிளறிய பிறகு, சில்லி சாஸ் சேர்த்துக் கிளறிவிடவும். தேவைப்பட்டால், இதில் சிறிதளவு தண்ணீர் சேர்த்து, பொரித்த மஷ்ரூமை சேர்த்துக் கிளறி தண்ணீர் சுத்தமாக வற்றியதும் இறக்கவும். இதில் ஸ்பிரிங் ஆனியன் போட்டு அழகுபடுத்திப் பரிமாறவும்.

 

No comments:

Post a Comment