Monday, 3 October 2016

பிரெட் பர்ஃபி

பிரெட் பர்ஃபி

பிரெட் பர்ஃபி

 

தேவையானவை:

* பிரெட் கிரம்ப்ஸ்  - ஒரு கப்

* பால் - அரை கப்

* தேங்காய்த் துருவல் - அரை கப்

* சர்க்கரை - ஒரு கப்

* நெய் - 4 டேபிள்ஸ்பூன்

* ரோஸ் எசன்ஸ் - 4 துளிகள்

* முந்திரிப்பருப்பு - 15

 

செய்முறை:

பிரெட் கிரம்ப்ஸை சில நிமிடங்கள் பாலில் ஊறவைத்துக்கொள்ளவும். அடுப்பில் நான்-ஸ்டிக் பேன் வைத்து தேங்காய்த் துருவல், சர்க்கரையைச் சேர்த்து அது கரையும் வரை கிளறவும். பிறகு பாலில் ஊறவைத்துள்ள பிரெட் கிரம்ப்ஸைச் சேர்த்துக் கிளறவும். பின்னர் உடைத்த முந்திரி, நெய், ரோஸ் எசன்ஸ் சேர்த்து, கலவை பேனில் ஒட்டாமல் வரும்வரை கிளறவும். பேனில் ஒட்டாதபதம் வந்ததும் நெய் தடவிய தட்டில் ஊற்றி ஃப்ரிட்ஜில் அரை மணி நேரம் வைத்து குளிரவிடவும். பிறகு, விரும்பிய வடிவில் துண்டுகள் போட்டு முந்திரியை மேலே வைத்து அலங்கரிக்கவும்.

 

குறிப்பு:

பிரெட் கிரம்ப்ஸ் கிடைக்கவில்லையென்றால் இரண்டு பிரெட்களை எடுத்து அதன் ஓரங்களை நீக்கிவிட்டு கையால் நன்கு உதிர்த்துக் கொள்ளுங்கள். பிரெட் கிரம்ப்ஸ் ரெடி.

 

 

No comments:

Post a Comment