கம்பு அவல் காரக் கொழுக்கட்டை
கம்பு அவல் காரக் கொழுக்கட்டை
தேவையானவை:
கம்பு அவல் - ஒரு கப்
எண்ணெய் - 2 டீஸ்பூன்
பச்சை மிளகாய் - 2
கறிவேப்பிலை - 10
கடுகு - சிறிதளவு
உளுத்தம்பருப்பு - சிறிதளவு
பெருங்காயம் - சிறிதளவு
தேங்காய்த்துருவல் - 3 டேபிள்ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
கம்பு அவலை கழுவி, அரை மணி நேரம் வெந்நீரில் ஊற வைக்கவும். பச்சை மிளகாய், கறிவேப்பிலையை பொடியாக நறுக்கவும். அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் விட்டு சூடானதும் கடுகு, உளுத்தம்பருப்பு, பெருங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை சேர்த்துத் தாளிக்கவும். தாளித்தவற்றை ஊறிய கம்பு அவலில் சேர்த்து உப்பு, தேங்காய்த்துருவல் சேர்த்து நன்கு பிசைந்துகொள்ளவும். பிசைந்த அவலை கொழுக்கட்டைகளாகப் பிடித்து ஆவியில் 10 நிமிடம் வேகவைத்து எடுக்கவும்.

No comments:
Post a Comment