Monday, 3 October 2016

ராகி அம்மணிக் கொழுக்கட்டை

ராகி அம்மணிக் கொழுக்கட்டை

ராகி அம்மணிக் கொழுக்கட்டை

 

தேவையானவை:

 

 ராகி மாவு - அரை கப்

 தண்ணீர் - அரை கப்

 தேங்காய்த்துருவல் - 3 டேபிள்ஸ்பூன்

 

தாளிக்க:

 

 எண்னெய் - 2 டீஸ்பூன்

 கடுகு - சிறிதளவு

 உளுத்தம்பருப்பு - சிறிதளவு

 காய்ந்த மிளகாய் - 2

 கறிவேப்பிலை - சிறிதளவு

 உப்பு - தேவையான அளவு

 

செய்முறை:

 

வாணலியை அடுப்பில் வைத்து ராகி மாவைச் சேர்த்து எண்ணெய் விடாமல் வறுத்து தனியாக எடுத்துக் கொள்ளவும். அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து அரை கப் தண்ணீரைச் சேர்த்து கொதிக்க வைத்து இறக்கவும். பிறகு, வறுத்து வைத்துள்ள மாவில் ஊற்றி, உப்பு சேர்த்துப் பிசைந்துகொள்ளவும். பிசைந்த மாவை சிறுசிறு உருண்டைகளாக உருட்டி ஆவியில் வேக வைத்து எடுக்கவும்.

 

அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் விட்டு சூடானதும் கடுகு, உளுத்தம்பருப்பு, காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை சேர்த்துத் தாளிக்கவும். இத்துடன் வேகவைத்த ராகி அம்மணிக் கொழுக்கட்டை, தேங்காய்த்துருவல் சேர்த்துக் கிளறி இறக்கவும்.

 

குறிப்பு:

 

சர்க்கரை, தேங்காய்த்துருவல் சேர்த்து, இனிப்பு அம்மணிக் கொழுக்கட்டையும் செய்யலாம்.

 

 

No comments:

Post a Comment