Tuesday, 4 October 2016

முந்திரி புலாவ்

முந்திரி புலாவ்

முந்திரி புலாவ்

 

தேவையானவை:

 

பிரியாணி அரிசி  அரை கிலோ

 

பட்டை 3

 

கிராம்பு  3

 

பிரியாணி இலை  2

 

ஏலக்காய்  5

 

சீரகம்  1 டீஸ்பூன்

 

பெரிய வெங்காயம்  1 (ஸ்லைஸ்களாக நறுக்கவும்)

 

காய்ச்சிய பால்  100 மில்லி

 

இஞ்சி விழுது  1 டேபிள்ஸ்பூன்

 

பூண்டு விழுது  1 டேபிள்ஸ்பூன்

 

புதினா  1 டேபிள்ஸ்பூன்

 

கொத்தமல்லித்தழை  2 டேபிள்ள்ஸ்பூன்

 

பச்சை மிளகாய்  2 (இரண்டாக கீறியது)

 

உடைத்த முந்திரிப்பருப்பு  25 கிராம்

 

நெய்  25 கிராம்

 

எண்ணெய்  25 கிராம்

 

உப்பு  தேவையான அளவு

செய்முறை:

 

முந்திரியை சிறிது நெய்யில் வறுத்து வைக்கவும். பிரியாணி அரிசியை இரண்டு முறை கழுவி இருபது நிமிடம் ஊற வைக்கவும். வாய் அகன்ற பிரியாணி பாத்திரத்தை அடுப்பில் வைத்து, எண்ணெய் ஊற்றி பட்டை, கிராம்பு ஏலக்காய், பிரியாணி இலை சேர்த்து வதக்கி, சீரகம், வெங்காயம் சேர்த்து வெங்காயத்தின் நிறம் மாற வதக்கவும். இஞ்சி, பூண்டு விழுதுகளைச் சேர்த்து பச்சை வாசனை போக வதக்கியதும் பச்சை மிளகாய், புதினா, கொத்தமல்லித்தழை சேர்த்து வதக்கி ஒன்றேகால் பங்கு தண்ணீர், பால், உப்பு, அரிசி சேர்த்து வேக விடவும். அரிசி வெந்ததும் லேசாகக் கிளறி முந்திரிப்பருப்பு சேர்க்கவும். அடுப்பில் ஒரு தோசைக்கல்லை வைத்து அதன் மேல் இந்தப் பாத்திரத்தை வைத்து, மூடி போடவும். இனி தீயை முற்றிலும் குறைத்து மூடியின் மேல் கனமான பாத்திரத்தை வைத்து ஐந்து நிமிடம் 'தம்' போடவும். பின் மூடியை திறந்து நெய் ஊற்றிக் கிளறி இறக்கிப் பரிமாறவும்.

 

No comments:

Post a Comment