பாலடை கோஃப்தா கிரேவி
பாலடை கோஃப்தா கிரேவி
தேவையானவை:
பாலடை - அரை கப்
உருளைக்கிழங்கு - ஒன்று
எண்ணெய் - தேவையான அளவு
கோஃப்தாவுக்கு:
பச்சை மிளகாய் - 2
பொடியாக நறுக்கிய இஞ்சி -
ஒரு டீஸ்பூன்
அம்சூர் பவுடர் - சிறிதளவு
பெரிய வெங்காயம் - ஒன்று (பொடியாக நறுக்கியது)
சோளமாவு, பிரெட் கிரம்ப்ஸ் - தலா 3 டேபிள்ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
கிரேவி செய்ய:
பட்டை, சோம்பு, ஏலக்காய் சேர்த்து - ஒரு டேபிள்ஸ்பூன்
இஞ்சி-பூண்டு பேஸ்ட் - 2 டீஸ்பூன்
மிளகாய்த்தூள் - 2 டேபிள்ஸ்பூன்
மல்லித்தூள் (தனியாத்தூள்) - ஒரு டீஸ்பூன்
சீரகத்தூள், மஞ்சள்தூள் - தலா அரை டீஸ்பூன்
பெரிய வெங்காயம் - 2
தக்காளி - 2
உடைத்த முந்திரி - 10 துண்டுகள்
ஃப்ரெஷ் கிரீம் - 2 டேபிள்ஸ்பூன்
அல்லது வெண்ணெய் - ஒரு டேபிஸ்ள்பூன் (விருப்பப்பட்டால்)
உப்பு - தேவையான அளவு
மேலே அலங்கரிக்க:
கஸூரிமேத்தி - 2 டேபிள்ஸ்பூன்
செய்முறை:
அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து பாலடையைச் சேர்த்து, அளவான நீர் ஊற்றி அரைவேக்காடாக வேக வைத்து, தண்ணீரை வடித்து வைக்கவும். மற்றொரு பாத்திரத்தில் உருளைக்கிழங்கைச் சேர்த்து வேகவைத்து மசிக்கவும். பிறகு ஒரு பாத்திரத்தில் வெந்த பாலடை, மசித்த உருளைக்கிழங்கு, பொடியாக நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி, ஆம்சூர்பவுடர், உப்பு, பிரெட் கிரம்ப்ஸ், சோளமாவு என கோஃப்தாவுக்கு கொடுத்தவற்றை எல்லாம் சேர்த்துப் பிசையவும். பிறகு, சின்ன எலுமிச்சை அளவுக்கு உருண்டைகளாக உருட்டி எண்ணெயில் பொரித்து எடுத்தால் கோஃப்தா ரெடி.
அடுப்பில் வாணலியை வைத்து 2 டேபிள்ஸ்பூன் எண்ணெய் விட்டு பட்டை, சோம்பு, ஏலக்காய் சேர்த்து தாளிக்கவும். இத்துடன் மிளகாய்த்தூள், மல்லித்தூள் (தனியாத்தூள்), சீரகத்தூள், மஞ்சள்தூள், உப்பு சேர்த்து வதக்கவும். பிறகு இஞ்சி-பூண்டு பேஸ்ட் சேர்த்து பச்சை வாசனை போக வதக்கவும். மிக்ஸியில் நறுக்கிய தக்காளி, வெங்காயம், முந்திரியை சிறிது நீர் விட்டு பேஸ்டாக அரைத்துக்கொள்ளவும். வதங்கிக் கொண்டிருக்கும் கலவையில் தக்காளி பேஸ்டை ஊற்றிக் கொதிக்க விடவும். பச்சை வாசனை போக கொதித்ததும், இறக்கி கஸூரி மேத்தி தூவிப் பரிமாறவும்.
விருப்பப்பட்டால், இறக்கிய கிரேவியில் ஃப்ரெஷ் கிரீம் அல்லது வெண்ணெய் சேர்த்து பொரித்த கோஃப்தா உருண்டைகளைச் சேர்த்துப் பரிமாறவும்.

No comments:
Post a Comment