Thursday, 6 October 2016

மி கொரெங்

மி கொரெங்

மி கொரெங்

 

தேவையானவை:

 

 வேக வைத்த ஹக்கா நூடூல்ஸ்- 200 கிராம் (டிபார்ட்மென்ட் ஸ்டோர்களில் கிடைக்கும்)

 பெரிய வெங்காயம் - 1 (பாதியை ஸ்லைஸ்களாகவும், மீதியை நீளமாகவும் நறுக்கவும்)

 பச்சை மிளகாய் - 1(நீளமாக இரண்டாக நறுக்கவும்)

 தக்காளி - ஒன்றில் பாதி (பெரியதாக நறுக்கவும்)

 வேக வைத்த உருளைக்கிழங்கு - ஒன்றில் பாதி (டைஸ் வடிவத்துக்கு நறுக்கவும்)

 பாக்சாய் கீரை - 2 இலைகள் (நீளமாக நறுக்கவும்) (சூப்பர் மார்கெட்டில் கிடைக்கும்.            

   இதற்கு பதில் பாலக் கீரையையும் பயன்படுத்தலாம்)

 பீன் ஸப்ரவுட்ஸ் - 20 கிராம் பூண்டு - 1 டீஸ்பூன் (பொடியாக நறுக்கியது)

 சைனீஸ் முட்டைக்கோஸ் - 20 கிராம் (நீளமாக நறுக்கவும்)

 வேக வைத்த சிக்கன் துண்டுகள் - 30 கிராம்

 முட்டை - 1

 இறால் - 5 பீஸ் (ஒவ்வொரு பீஸையும் இரண்டாக நறுக்கவும்)

 சோயா சாஸ் - 3 டேபிள்ஸ்பூன் + அரை டீஸ்பூன்

 எண்ணெய் - தேவையான அளவு

 டொமேட்டோ சாஸ் - 1 டேபிள்ஸ்பூன்

 ஃபுட் கலர் - 1 டீஸ்பூன் (ரெட் கலர்)

 சர்க்கரை - 1 டீஸ்பூன்

 வெள்ளை மிளகுத்தூள் - 1 டீஸ்பூன்

 ஃப்ரைடு ஆனியன் - 10 கிராம் (விருப்பப்பட்டால்)

 எலுமிச்சைத் துண்டு - மிகவும் சிறியது 1

 உப்பு - தேவையான அளவு

 

செய்முறை:

 

ஒரு பாத்திரத்தில் தண்ணீர் விட்டு நூடூல்ஸ் சேர்த்து வேகவிட்டு தண்ணீரை இறுத்து எண்ணெய் விட்டு புரட்டி பதினைந்து நிமிடம் ஆற விடவும். அடுப்பில் சாஸ் பேனை வைத்து எண்ணெய் விட்டு சூடானதும், இதை ஒரு பவுலில் ஊற்றி வைத்துக் கொள்ளவும். இதே கடாயில் மீண்டும் இரண்டு டேபிள்ஸ்பூன் எண்ணெய் விட்டு சூடானதும்  இதில் முட்டையை உடைத்து ஊற்றி தேவையான அளவு உப்பு சேர்த்து வதக்கி, தனியாக எடுத்து வைக்கவும்.  மீண்டும் கடாயில் சிறிது எண்ணெய் ஊற்றி, இதில்  பூண்டு சேர்த்து வதக்கவும்.இதனுடன் ஸ்லைஸ் வெங்காயம், நீளமாக நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், தக்காளி, உருளைக்கிழங்கு, பாக்சாய், பீன் ஸ்ப்ரவுட்ஸ், முட்டைக்கோஸ், சிக்கன், வதக்கி வைத்திருக்கும் முட்டை, இறால் சேர்த்து நன்கு வதக்கவும். காய்கறிகள் வெந்து, இறாலும் வேக வேண்டும். பிறகு வேக வைத்த நூடூல்ஸ, மூன்று டேபிள்ஸ்பூன் சோயா சாஸ் சேர்த்து வதக்கவும்.  டொமேட்டோ சாஸ், உப்பு, சர்க்கரை, வெள்ளை மிளகுத்தூள் சேர்த்து வதக்கி, ஃபுட் கலரையும் சேர்த்து ஒரு நிமிடம் கிளறவும். விருப்பப்பட்டால் எலுமிச்சையை நூடூல்ஸ் மேல் சிறிதளவு சாறு பிழிந்து விட்டுக் கிளறி இறக்கவும். பரிமாறும் முன்பு ஃப்ரைடு ஆனியன் தூவி பரிமாறவும்.

 

 

No comments:

Post a Comment