Thursday, 6 October 2016

சிங்கப்பூர் ரைஸ் வெர்மிசெல்லி

சிங்கப்பூர் ரைஸ் வெர்மிசெல்லி

சிங்கப்பூர் ரைஸ் வெர்மிசெல்லி

 

தேவையானவை:

 

 ரைஸ் வெர்மிசெல்லி -1 பாக்கெட் (நீளமானது)

 கேரட் - 20 கிராம் (நீளமாக நறுக்கவும்)

 சைனீஸ் முட்டைக்கோஸ் - 20 கிராம் (நீளமாக நறுக்கியது)

 பீன் ஸ்ப்ரவுட்ஸ் - 20 கிராம்

 பாக்சாய் கீரை - 20 கிராம் (நீளமாக நறுக்கவும்)  (சூப்பர் மார்கெட்டில் கிடைக்கும்.

இதற்கு பதில் பாலக் கீரையையும் பயன்படுத்தலாம்)

 கறுப்பு மஸ்ரூம் - 20 கிராம் (நீள துண்டுகள்)

 வேக வைத்த சிக்கன் - 30 கிராம் (நீளமாக நறுக்கவும்)

 இறால் - 5 பீஸ் (நீளவாக்கில் இரண்டாக நறுக்கவும்)

 முட்டை - 1

 பூண்டு - 4 (பொடியாக)

 உப்பு - தேவையான அளவு

 சர்க்கரை - 1 டீஸ்பூன்

 வெள்ளை மிளகுத்தூள் - 1 டீஸ்பூன்

 நல்லெண்ணெய் - 30 மில்லி

 ரெட் சில்லி பேஸ்ட் - அரை டீஸ்பூன்

 ஆய்ஸ்டர் சாஸ் (சிப்பி சாஸ்) - அரை டீஸ்பூன்

 சோயா சாஸ் - அரை டீஸ்பூன்

 பச்சை, சிவப்பு, மஞ்சள் நிற குடமிளகாய்கள்  - 10 கிராம்  (நீளமாக நறுக்கவும்)

 

செய்முறை:

 

பத்து காய்ந்த மிளகாயை வெந்நீரில் ஊற வைத்து, மிக்ஸியில் சேர்த்து பேஸ்டாக அரைத்து எடுக்கவும். அடுப்பில் கடாயை வைத்து ஒரு டேபிள்ஸ்பூன் எண்ணெய் விட்டு சூடானதும், அதை ஒரு பவுலில் ஊற்றி தனியாக வைத்து விடவும். மீண்டும் கடாயில் எண்ணெய் விட்டு முட்டையை உடைத்து ஊற்றி, ஒரு சிட்டிகை உப்பு சேர்த்துக் கிளறி தனியாக வைக்கவும். மீண்டும் கடாயில் சிறிது எண்ணெய் விட்டு இறாலைச் சேர்த்து கால் பாகம் வேகும் அளவுக்கு வதக்கி தனியாக வைக்கவும். கடாயில் மறுபடியும் எண்ணெய் ஊற்றி, பூண்டு சேர்த்து வதக்கி அதில் கேரட், முட்டைக்கோஸ், பீன் ஸ்ப்ரவுட்ஸ், பாக்சாய், மஸ்ரூம், சிக்கன், இறால், முட்டை, வேக வைத்த வெர்மிசெல்லி சேர்த்து நன்கு வதக்கவும். இதில் சில்லி பேஸ்ட், ஆய்ஸ்டர் சாஸ், சோயா சாஸ், உப்பு, சர்க்கரை, வெள்ளை மிளகுத்தூள், குடமிளகாய் ஆகியவற்றைப் போட்டு வதக்கி, இறக்கிப் பரிமாறவும்.

 

No comments:

Post a Comment