ஜேட் சூப்
ஜேட் சூப்
தேவையானவை:
ஸ்பினாச் (பாலக்கீரை) - 100 கிராம் (கழுவி பொடியாகக் கொத்தி வைக்கவும்)
இஞ்சி - 1 டேபிள்ஸ்பூன் (பொடியாக நறுக்கியது)
வெண்ணெய் - 1 டேபிள்ஸ்பூன்
எண்ணெய் - 1 டேபிள்ஸ்பூன்
தண்ணீர் - 200 மில்லி
கார்ன்ஃப்ளார் - 50 கிராம் (சிறிது தண்ணீரில் கரைத்து வைக்கவும்)
உப்பு, சர்க்கரை - தலா 1 டீஸ்பூன்
வெள்ளை மிளகுத்தூள் - 1 டீஸ்பூன்
செய்முறை:
கடாயில் எண்ணெய் ஊற்றி வெண்ணெய், சேர்த்து சூடானதும் இஞ்சி சேர்த்து பச்சை வாசனை போக வதக்கவும். இதில் கொத்திய கீரையைச் சேர்த்து நன்கு வதக்கவும். கீரை நிறம் மாறி வெந்ததும் தண்ணீர் ஊற்றி உப்பு, சர்க்கரை, வெள்ளைமிளகுத்தூள் சேர்த்துக் கொதிக்க விட்டு கார்ன்ஃப்ளார் சேர்த்து சூப் பதம் வந்ததும் இறக்கி விடவும்.

No comments:
Post a Comment