வெஜிடபிள் நக்கட்ஸ்
வெஜிடபிள் நக்கட்ஸ்
என்னென்ன தேவை?
உருளைக்கிழங்கு - 6 (வேக வைத்து தோல் உரித்தது),
ஃப்ரெஞ்சு பீன்ஸ் - 1/2 கப் (நறுக்கியது),
கேரட் - 3/4 கப் (நறுக்கியது),
வெங்காயம் - 1/4 கப் (நறுக்கியது),
பச்சைப்பட்டாணி - 1/4 கப்,
ஸ்வீட் கார்ன் - 1/4 கப்,
கொத்தமல்லித்தழை - கையளவு (பொடியாக நறுக்கியது),
சோள மாவு - 1/4 கப்,
இஞ்சி - 1/2 டீஸ்பூன் (நறுக்கியது),
பச்சை மிளகாய் - 1 (நறுக்கியது),
ஓரிகானோ - 1/2 டீஸ்பூன்,
தைம் - 1/2 டீஸ்பூன்,
பூண்டு - 1/2 டீஸ்பூன் (விழுதாக),
உப்பு - தேவைக்கேற்ப,
மிளகு - 1/2 டீஸ்பூன்,
எலுமிச்சைச் சாறு - 1 டீஸ்பூன்,
பிரெட் துகள்கள் அல்லது கார்ன் ஃப்ளேக்ஸ் துகள்கள்- 3/4 கப்,
எண்ணெய் - பொரிப்பதற்கு.
எப்படிச் செய்வது?
காய்கறிகளை வதக்க கடாயில் எண்ணெய் ஊற்றி சூடாக்கவும். ஒரு பாத்திரத்தில் உருளைக்கிழங்கை மசித்து வைத்துக் கொள்ளவும். பிரெட் துகள்கள் தவிர மற்றவற்றை இதில் சேர்க்கவும். நன்றாக கலந்து அதில் கால் அல்லது அரை கப் பிரெட் துகள்களைச் சேர்த்து கலக்கவும். இதை விருப்பப்பட்ட வடிவங்களில் சின்னச் சின்னதாக செய்து கொள்ளவும். அவற்றை சோளமாவு கரைசலில் முக்கி பிரெட் துகள்கள் மேல் புரட்டி எடுத்து எண்ணெயில் ெபான்னிறமாக வறுத்து எடுக்கவும்.
No comments:
Post a Comment