Sunday 9 October 2016

பிரக்கோலி, செலரி ஸ்டிர் ஃப்ரை

பிரக்கோலி, செலரி ஸ்டிர் ஃப்ரை

பிரக்கோலி, செலரி ஸ்டிர் ஃப்ரை

 

என்னென்ன தேவை?

 

பிரக்கோலி  - 1 (மீடியம்),

செலரி தண்டுகள் - சிறிது,

வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது),

இஞ்சி - 3/4 டீஸ்பூன்,

சாம்பார் தூள் அல்லது மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்,

உப்பு - தேவைக்கேற்ப,

மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்,

எண்ணெய் - 1 டீஸ்பூன்,

சோளமாவு - 2 டேபிள்ஸ்பூன்,

மஞ்சூரின் மசாலா மிக்ஸ் பவுடர் - 1 பாக்கெட்,

சீரகம் - 1 டீஸ்பூன்.

 

எப்படிச் செய்வது?

 

பிரக்கோலி மற்றும் செலரியை சின்னச் சின்ன துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும். அரை வேக்காட்டில் பிரக்கோலியை வேக வைத்து எடுத்துக் கொள்ளவும். கடாயில் எண்ணெய் ஊற்றி சூடேற்றவும். இதில் சீரகம், இஞ்சி, வெங்காயம் போட்டு வதக்கவும். அதனுடன் சாம்பார் தூள், உப்பு சேர்க்கவும். இதில் பிரக்கோலி, செலரி, மஞ்சூரின் மசாலா கலவை மற்றும் தண்ணீர் கலந்து கொள்ளவும், 3 முதல் 5 நிமிடம் வரை குறைந்த தீயில் வைத்து பொரித்தெடுக்கவும். மொறுமொறுப்பு குறையாமல் பரிமாறவும்.

No comments:

Post a Comment