Sunday 9 October 2016

தனியா மங்கோரி

தனியா மங்கோரி

தனியா மங்கோரி

 

என்னென்ன தேவை?

 

சிறுபருப்பு வடகம்...

 

வெயில் காலத்தில் சிறுபருப்பை ஊற வைத்து, கொர கொரப்பாக காய்ந்தமிளகாய், உப்பு, சீரகம் சேர்த்து அரைத்து நன்கு காய வைத்துக் கொள்வார்கள். இது கடைகளிலும் கிடைக்கிறது. வீட்டில் சுலபமாக செய்யலாம்.

 

சிறுபருப்பு வடாகம் - 100 கிராம்,

நறுக்கிய கொத்தமல்லித்தழை -  2 கப்,

சீரகம் - 1 டீஸ்பூன்,

இஞ்சி, பூண்டு விழுது - தலா 1 டேபிள்ஸ்பூன்,

பெரிய வெங்காயம் - 1,

தக்காளி விழுது - 4 தக்காளியில் அரைத்தது,

உப்பு, எண்ணெய் - தேவைக்கு,

கரம்மசாலாத் தூள் - 1/2 டீஸ்பூன்,

தனியாத் தூள் - 1 டேபிள்ஸ்பூன்,

மிளகாய்த் தூள் - 1 டீஸ்பூன்,

மஞ்சள் தூள்- 1 டீஸ்பூன்,

தேவைப்பட்டால் பாதி எலுமிச்சைச்சாறு கடைசியில்,

எண்ணெய் - 1/2 கப்.

 

எப்படிச் செய்வது?

 

ஒரு கடாயில் சிறுபருப்பு வடாகத்தை பொன்னிறமாக வறுத்தெடுக்கவும். அதே கடாயில் தேவையான எண்ணெயில் சீரகம், நறுக்கிய வெங்காயத்தை பொன்னிறமாக வதக்கவும். இஞ்சி, பூண்டு விழுது, தக்காளி விழுது சேர்த்து பச்சை வாசனை போகும்வரை வதக்கி எண்ணெய் மேலே வந்ததும், மிளகாய், மஞ்சள்தூள், தனியா சேர்த்து, 1 கப் தண்ணீர் சேர்த்து மூடி விடவும். கொதி வந்ததும் வடகத்தை சேர்த்து, பாதி வெந்ததும், கொத்தல்லித்தழை, உப்பு சேர்த்து சிறிது நேரம் வேக விட்டு கரம் மசாலாத் தூள் தூவி கிரேவியாக இறக்கவும். காய்கறி இல்லாதபோது ஒரு கறி.

No comments:

Post a Comment