ஆந்திரா மஷ்ரூம் ஃபிரை
ஆந்திரா மஷ்ரூம் ஃபிரை
தேவையானவை:
மஷ்ரூம் - 200 கிராம்
இஞ்சி-பூண்டு விழுது- ஒரு டீஸ்பூன்
இஞ்சி - ஒரு டீஸ்பூன் (நறுக்கவும்)
பூண்டு - ஒரு டீஸ்பூன் (நறுக்கவும்)
பெரிய வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கவும்)
பச்சை மிளகாய் - 2
மிளகாய்த்தூள் - இரண்டு டீஸ்பூன்
சோளமாவு - ஒரு டேபிள்ஸ்பூன்
உப்பு- தேவையான அளவு
எலுமிச்சைப்பழம் - 1 (சாறு எடுக்கவும்)
எண்ணெய் - பொரிக்கத் தேவையான அளவு
கொத்தமல்லித்தழை, கறிவேப்பிலை - சிறிதளவு
செய்முறை:
மஷ்ரூமை ஈரத்துணியால் துடைத்து, இரண்டாக நறுக்கி, இதில் இஞ்சி-பூண்டு விழுது, ஒரு டீஸ்பூன் மிளகாய்த்தூள், சோள மாவு, உப்பு, எலுமிச்சைச்சாறு ஊற்றி, சிறிதளவு தண்ணீர் சேர்த்து பிசைந்து, எண்ணெயில் பொரித்து எடுக்கவும். அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் விட்டு, நறுக்கிய இஞ்சி-பூண்டு, பச்சை மிளகாய் கறிவேப்பிலை, வெங்காயம் சேர்த்து வதக்கவும். இத்துடன் மீதியிருக்கும் மிளகாய்த்தூளையும், பொரித்து வைத்திருக்கும் மஷ்ரூமையும் சேர்த்து நன்றாகக் கிளறி, கொத்தமல்லித்தழை தூவிப் பரிமாறவும்.

No comments:
Post a Comment