Friday 7 October 2016

பாலக் கிரேவி

பாலக் கிரேவி

பாலக் கிரேவி

 

தேவையானவை:

 

பசலைக்கீரை - 2 கட்டு

 

பூண்டு - 2 பல்

 

பச்சை மிளகாய் - 2

 

நறுக்கிய வெங்காயம் - 1

 

இஞ்சி-பூண்டு விழுது - தலா ஒரு டேபிள்ஸ்பூன்

 

மிளகாய்த்தூள் - அரை டீஸ்பூன்

 

மல்லித்தூள் (தனியாத்தூள்) - ஒரு டீஸ்பூன்

 

மஞ்சள்தூள் - அரை டீஸ்பூன்

 

உப்பு - தேவையான அளவு

 

எண்ணெய்- தேவையான அளவு

 

பட்டை - சிறிய துண்டு

 

கிராம்பு - 1

 

ஏலக்காய் - 1

 

சீரகம் - கால் டீஸ்பூன்

 

செய்முறை:

 

பசலைக்கீரை, பூண்டு, பச்சை மிளகாய் ஆகியவற்றை தேவையான அளவு தண்ணீரில் போட்டு, அடுப்பில் வைத்துக் கொதிக்க விடவும். கீரை வெந்ததும் அடுப்பை அணைத்து சூடு ஆறியதும் மிக்ஸியில் சேர்த்து அரைத்து தனியாக வைக்கவும். அடுப்பில் பேனை வைத்து எண்ணெய் ஊற்றி பட்டை, கிராம்பு, ஏலக்காய், சீரகம் சேர்த்துத் தாளிக்கவும். நறுக்கிய வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும். இஞ்சி பூண்டு விழுது, மிளகாய்த்தூள்மல்லித்தூள் (தனியாத்தூள்), மஞ்சள்தூள் உப்பு சேர்த்து இரண்டு டம்ளர் தண்ணீர் சேர்த்துக் கொதிக்க விடவும். அரைத்த கீரைக் கலவையைச் சேர்த்துக் கிளறி தீயைக் குறைத்து பச்சை வாசனை போகும் வரை கொதிக்க விட்டு இறக்கிப் பரிமாறவும்.

 

 

No comments:

Post a Comment