Saturday 8 October 2016

மசாலா கடலை

மசாலா கடலை

மசாலா கடலை

 

தேவையானவை: பச்சை வேர்க்கடலை - 100 கிராம், நசுக்கிய பூண்டு - 2, கடலைமாவு - 2 டேபிள்ஸ்பூன், அரிசிமாவு  ஒரு டேபிள்ஸ்பூன், மிளகாய்த்தூள்  அரை டீஸ்பூன், மஞ்சள்தூள்  கால் டீஸ்பூன், கரம் மசாலாத் தூள்  கால் டீஸ்பூன், சோடா உப்பு  ஒரு சிட்டிகை, சாட் மசாலா  கால் டீஸ்பூன், ஆரஞ்சு ஃபுட் கலர்  கால் டீஸ்பூன், உப்பு  தேவையான அளவு, எண்ணெய்  பொரிக்க

 

செய்முறை: ஒரு பாத்திரத்தில், பச்சை வேர்க்கடலை, நசுக்கிய பூண்டு, கடலை மாவு, அரிசி மாவு, மற்ற மசாலாக்கள், சோடா உப்பு, உப்பு அனைத்தையும் ஒன்றாகப் போட்டு... ஆரஞ்சு ஃபுட் கலரை வெதுவெதுப்பான தண்ணீரில் கலந்து சேர்த்துப் பிசையவும். இதை சூடான எண்ணெயில் போட்டு, மொறுமொறுவென வரும் வரை பொரித்து எடுத்தால் மசாலா கடலை ரெடி.

 

 

No comments:

Post a Comment