கடல் நண்டுச் சாறு
கடல் நண்டுச் சாறு
தேவையானவை:
பெரிய வெங்காயம் - 250 கிராம்
பிரிஞ்சி இலை - 5 கிராம்
மிளகு - 10 கிராம்
ஏலக்காய் - 5 கிராம்
கிராம்பு - 5 கிராம்
கொத்தமல்லித்தழைத்தண்டு - 250 கிராம் (பொடியாக நறுக்கவும்)
தனியாத்தூள் - 15 கிராம்
மிளகாய்த்தூள் - 20 கிராம்
கறிவேப்பிலை - 25 கிராம்
பூண்டு - 50 கிராம்
பச்சை மிளகாய் - 50 கிராம் (பொடியாக நறுக்கவும்)
சீரகத்தூள் - 15 கிராம்
நண்டு - 10
எண்ணெய் - 100 மில்லி
உப்பு - தேவையான அளவு
நண்டின் சதைப்பகுதி - 100 கிராம்
சோம்பு - 10 கிராம்
தக்காளி - 100 கிராம் (பொடியாக நறுக்கவும்)
வெண்ணெய் - சிறிது
மஞ்சள்தூள் - 10 கிராம்
செய்முறை:
அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் விட்டு, மிளகு, கிராம்பு, சோம்பு, ஏலக்காய், கறிவேப்பிலை, பூண்டு, பிரிஞ்சி இலை பச்சை மிளகாய் வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கவும். நண்டை நன்றாகக் கழுவி சதைப்பகுதியுடன் நன்கு இடித்து வைக்கவும். இதை தாளித்தவற்றோடு சேர்த்து நன்கு வதக்கவும். இதில் தக்காளி கொத்தமல்லித்தழைத்தண்டு சேர்த்து மைய வதக்கி, மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், மல்லித்தூள் (தனியாத்தூள்) சேர்த்து வதக்கி, உப்பு, தண்ணீர் ஊற்றி அரை மணி நேரம் கொதிக்க விடவும். இந்த தண்ணீரை வடிகட்டி தனியாக ஒரு பவுலில் ஊற்றி வைக்கவும். அடுப்பில் வாணலியை வைத்து வெண்ணெய் இட்டு சூடானதும், நண்டின் சதைப்பகுதியைச் சேர்த்து பச்சை வாசனை போக வேகும் அளவுக்கு லேசாக வதக்கவும். இதைப் பரிமாறும் போது சூப்பில் சீரகத்தூள் தூவிப் பரிமாறவும்.

No comments:
Post a Comment