Sunday 9 October 2016

வெஜிடபிள் ஸ்டஃப்டு இட்லி

வெஜிடபிள் ஸ்டஃப்டு இட்லி

வெஜிடபிள் ஸ்டஃப்டு இட்லி

 

தேவையானவை:

 

 இட்லி மாவு - 2 கப்

 உருளைக்கிழங்கு, முட்டைக்கோஸ், கேரட், குடமிளகாய் - ஒரு கப்

 மீடியம் சைஸ் பெரிய வெங்காயம் - ஒன்று

 பச்சை மிளகாய் - 2 (பொடியாக நறுக்கியது)

 எலுமிச்சைச்சாறு - ஒரு டேபிள்ஸ்பூன்

 மஞ்சள்த்தூள் - ஒரு சிட்டிகை

 கறிவேப்பிலை - 10 இலைகள்

 உடைத்த உளுந்து - அரை டீஸ்பூன்

 கடுகு - ஒரு டீஸ்பூன்

 எண்ணெய் - தேவையான அளவு

 உப்பு - தேவையான அளவு

 

செய்முறை:

 

காய்கறிகளைக் கழுவி ஈரம் போகத் துடைத்து, மிக்ஸியில் போட்டு ஒரு சுற்று சுற்றி எடுக்கவும். அடுப்பில் கடாயை வைத்து சிறிது எண்ணெய் ஊற்றி கடுகு, கறிவேப்பிலை, உளுந்து, பச்சை மிளகாய் போட்டு ஒரு நிமிடம் வதக்கவும். கடுகு வெடித்து வரும் போது வெங்காயத்தைச் சேர்த்து நிறம் மாறும் வரை வதக்கவும். இதில் மிக்ஸியில் அடித்த காய்கறிக் கலவையைச் சேர்த்து, கூடவே தேவையான அளவு உப்பு, மஞ்சள்தூள் சேர்த்து மூன்று நிமிடங்கள் வதக்கவும். காய்கறிகள் நன்கு வெந்து வரும்போது அடுப்பை அணைத்து, எலுமிச்சைச்சாறு சேர்த்து கலக்கி, ஆற விடவும். இதனை 12 பகுதிகளாகப் பிரித்து தனியாக வைக்கவும். இட்லித் தட்டில் குறைவான அளவு மாவு ஊற்றி, அதன் நடுவில் காய்கறி கலவையின் ஒரு பகுதியை வைத்து, அதன் மேல் மீண்டும் இட்லி மாவை சிறிதளவு ஊற்றி காய்கறிக் கலவையை மூடவும். இட்லியை வேக வைத்து எடுத்து தேங்காய் மற்றும் தக்காளி சட்னியோடு சேர்த்துப் பரிமாறவும்.

 

No comments:

Post a Comment