Sunday 9 October 2016

ஸ்வீட்கார்ன் கோரியன்டர் பராத்தா

ஸ்வீட்கார்ன் கோரியன்டர் பராத்தா

ஸ்வீட்கார்ன் கோரியன்டர் பராத்தா

 

தேவையானவை:

 

 ஸ்வீட்கார்ன் - ஒரு கப்

 கொத்தமல்லித்தழை - அரை கப் (பொடியாக நறுக்கியது)  

 சோம்பு - ஒரு டீஸ்பூன்

 கோதுமை மாவு - ஒன்றரை கப்

 வெந்நீர் - கால் கப்

 எண்ணெய் - தேவையான அளவு

 

செய்முறை:

 

ஸ்வீட்கார்னை வேகவைத்து மிக்ஸியில் தண்ணீர் விடாமல் பேஸ்டாக அரைத்துக் கொள்ளவும். அடுப்பில் வெறும் வாணலியை வைத்து சோம்பை மணம் வரும் வரை வறுத்துக் கொள்ளவும். அரைத்த ஸ்வீட்கார்னோடு வறுத்த சோம்பு, கோதுமைமாவு, கொத்தமல்லித்தழை ஆகியவற்றைச் சேர்த்து தேவைப்படும் அளவுக்கு வெந்நீர் சேர்த்து, பிசைந்து பத்து நிமிடங்கள் ஈரத்துணியால் மூடி வைக்கவும். பிறகு மாவை சப்பாத்தி போல தேய்த்து தோசைக்கல்லில் எண்ணெய் விட்டு, சுட்டு எடுக்கவும். தயிர் மற்றும் ஊறுகாய் இதற்கு அருமையான சைட் டிஷ்ஷாக இருக்கும்.

 

No comments:

Post a Comment