Saturday 8 October 2016

புரொக்கோலி பொட்டேடோ பெஸன் சப்ஜி

புரொக்கோலி பொட்டேடோ பெஸன் சப்ஜி

புரொக்கோலி பொட்டேடோ பெஸன் சப்ஜி

 

தேவையானவை:

 

 புரொக்கோலி - 2 கப் (சின்ன சைஸ்களாக நறுக்கியது)

 பெரிய உருளைக்கிழங்கு - 2  (வேக வைத்து தோல் உரித்தது)

 எண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன்

 சீரகம் - அரை டீஸ்பூன்

 பெருங்காயத்தூள் - சிறிதளவு

 பூண்டு - ஒரு டேபிள்ஸ்பூன்

 பச்சை மிளகாய் - ஒன்று (பொடியாக நறுக்கியது)

 உப்பு - தேவையான அளவு

 கடலைமாவு - அரை கப்

 மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன்

 சீரகத்தூள் - கால் டீஸ்பூன்

 கரம் மசாலாத்தூள் - கால் டீஸ்பூன்

 மல்லித்தூள்(தனியா) - அரை டீஸ்பூன்

 மிளகாய்த்தூள் - அரை டீஸ்பூன்

 எலுமிச்சைச்சாறு - சிறிதளவு

 

செய்முறை:

 

உருளைக்கிழங்கை சிறு க்யூப்ஸ்களாக நறுக்கிக் கொள்ளவும். புரொக்கோலியை சின்ன பீஸ்களாக நறுக்கிக் கழுவி ஈரம் போக காய வைத்துக் கொள்ளவும். கடாயை அடுப்பில் ஏற்றி, மிதமான தீயில் வைத்து ஒரு டேபிள்ஸ்பூன் எண்ணெய் விட்டு சீரகம் சேர்த்து பொரிய விடவும். இதில் பெருங்காயத்தூள், பூண்டு, பச்சை மிளகாய் சேர்த்து இரண்டு நிமிடங்கள் வதக்கவும். இதில் புரொக்கோலியைச் சேர்த்து மூடி போட்டு இரண்டு முதல் மூன்று நிமிடங்கள் வேக வைக்கவும். பிறகு, மூடியைத் திறந்து உப்பு சேர்த்து மூடி, இரண்டு நிமிடங்கள் வேக வைக்கவும். இரண்டு நிமிடங்கள் கழித்து, நறுக்கிய உருளைக்கிழங்குகளைச் சேர்த்து கிளறவும். ஒரு பவுலில் கடலைமாவு, மஞ்சள்தூள், சீரகத்தூள், கரம் மசாலாத்தூள், மல்லித்தூள்(தனியா), மிளகாய்த்தூள் ஆகியவற்றை நன்கு கலந்து கொள்ளவும். இக்கலவையை அப்படியே வெந்து கொண்டிருக்கும் உருளைக்கிழங்கு கலவையின் மேலே நன்குபடும்படி பரவலாகத் தூவி மூடி போட்டு மூன்று நிமிடங்கள் வேக வைத்து லேசாக தண்ணீர் தெளித்து (மாவு கலவையில் ஈரம் பட வேண்டும் அவ்வளவே) மூடி போட்டு மீண்டும் மூன்று நிமிடங்கள் வேக வைத்து இறக்கி எலுமிச்சைச்சாறு சேர்க்கவும். இது, சப்பாத்திக்கு நல்ல சைட் டிஷ்.

 

 

No comments:

Post a Comment