Saturday 8 October 2016

தேங்காய் கருப்பட்டி லட்டு

தேங்காய் கருப்பட்டி லட்டு


தேங்காய் கருப்பட்டி லட்டு

 

தேவையானவை: துருவிய தேங்காய்  2 கப், கருப்பட்டி  ஒன்றரை கப், தண்ணீர்  கால் கப், ஏலக்காய்ப்்பொடி  ஒரு டீஸ்பூன், நெய்  சிறிது

 

செய்முறை: அடுப்பில் கடாயை வைத்து தீயைக் குறைத்து, துருவிய தேங்காயை  வாசனை வரும் வரை வறுத்து தனியாக‌ வைக்கவும்.  கடாயை அடுப்பில் ஏற்றி, கருப்பட்டியை இட்டு கால் கப் தண்ணீர் ஊற்றி கரைத்து வடிகட்டவும். பிறகு வடிகட்டிய கரைசலைக் குறைந்த தீயில் சற்று கடினமான உருட்டுப் பதம் வரும் வரை கிளறவும். தொடர்ந்து ஏலக்காய் பவுடர், வறுத்த தேங்காய் சேர்த்து சட்டியில் ஒட்டாத பதம் வரும் வரை கிளறி இறக்கவும். கையில் நெய் தடவிக்கொண்டு கலவை மிதமான சூட்டில் இருக்கும்போதே உருண்டை பிடித்தால் தேங்காய் வெல்ல லட்டு ரெடி.

 

No comments:

Post a Comment