Saturday 8 October 2016

சாமை அரிசி லட்டு

சாமை அரிசி லட்டு

சாமை அரிசி லட்டு

 

தேவையானவை: சுத்தம் செய்த சாமை  ஒரு கப், துருவிய வெல்லம்  முக்கால் கப், சத்து மாவு  2 டேபிள்ஸ்பூன், காய்ச்சிய பால்  கால் கப், நெய்  சிறிது

 

செய்முறை:அடுப்பில் கடாயை வைத்து சாமையைச் சேர்த்து குறைந்த தீயில் சாமை கிரிஸ்பியாகும் வரை வறுத்து ஆற வைத்து மிக்ஸியில் நைஸாக அரைத்து, அதனுடன் சத்துமாவைக் கலந்து வைக்கவும். அடுப்பில் பேனை வைத்து இரண்டு டேபிள்ஸ்பூன் தண்ணீர் விட்டு துருவிய வெல்லத்தைச் சேர்த்து கரைக்கவும். கரைசல் பிசுபிசுப்புத் தன்மையாக வரும்போது இறக்கி... சாமை மாவில் சேர்த்து கலந்து வைக்கவும். லட்டு டிரையாக இருக்க வேண்டுமென்றால், அப்படியே கையில் நெய்யைத் தடவி உருண்டைப் பிடிக்கவும். பால் சேர்க்கத் தேவையில்லை. அல்லது அடுப்பில் கடாயை வைத்து, இரண்டு டேபிள்ஸ்பூன் நெய் விட்டு அது கரைந்ததும் சாமை மாவு மற்றும் வெல்லக்கரைசலைச் சேர்த்து நன்கு கிளறி பால் சேர்த்து பேனில் ஒட்டாத பதம் வரும் வரை கிளறியும் லட்டு பிடிக்கலாம்.

 

No comments:

Post a Comment