Saturday 8 October 2016

பொரிவிளங்காய் உருண்டை

பொரிவிளங்காய் உருண்டை

பொரிவிளங்காய் உருண்டை

 

தேவையானவை: புழுங்கல் அரிசி  ஒரு கப், கடலைப்பருப்பு  அரை கப், வேர்க்கடலை  அரை கப், பாதாம்  ஒரு டேபிள்ஸ்பூன், ஏலக்காய்ப்பொடி  ஒரு டீஸ்பூன், தண்ணீர்  முக்கால் கப், துருவிய வெல்லம்  2 கப், நெய்  சிறிது

 

செய்முறை:அரிசியை லைட் பிரவுன் நிறம் வறும் வரை குறைந்த தீயில் வறுத்து தனியாக வைக்கவும். கடலைப்பருப்பு, வேர்க்கடலை மற்றும் பாதாமை தனித்தனியாக குறைந்த தீயில் தலா இரண்டு நிமிடங்கள் வறுத்து தனியாக வைக்கவும். சூடு ஆறியதும், வறுத்தவற்றை எல்லாம் நைஸாக மிக்ஸியில் அரைத்து, ஏலக்காய்ப்பொடி சேர்த்து ஒன்றாகக் கலக்கவும். தண்ணீரில் வெல்லத்தைச் சேர்த்து குறைந்த தீயில் கரைய விட்டு வடிகட்டி மீண்டும் அடுப்பில் ஏற்றவும். அருகில் ஒரு கப்பில் தண்ணீரை வைத்து, அதில் கொதித்துக் கொண்டிருக்கும் வெல்லத்தை ஒரு டிராப் விடவும். வெல்லம் கீழே பதிந்து, அதை உங்கள் கைகளால் உருட்ட முடிந்தால் பாகு சரியான பதத்துக்கு வந்துவிட்டது என்று அர்த்தம்.  அடுப்பை அணைத்து அரைத்துவைத்திருக்கும் மாவை பாகில் சேர்த்து, கரண்டியால் கிளறி கைகளில் நெய் தடவி லட்டு பிடிக்கவும். கொஞ்சம் தாமதப் ்படுத்தினாலும் பாகு கெட்டியாகிவிடும்.

 

 

No comments:

Post a Comment