Friday, 7 October 2016

மல்டிகலர் புலாவ்!

மல்டிகலர் புலாவ்!

மல்டிகலர் புலாவ்!

தேவையானவை:

 

பாஸ்மதி அரிசி - 1 கப்

 

கலர் கலரான குட மிளகாய்கள் - ஒவ்வொரு கலரிலும் 2 துண்டுகள்

 

அமெரிக்கன் ஸ்வீட்ஃகார்ன் (வேக வைத்தது) - 1/4 கப்

 

முந்திரி (அ) பாதாம் உடைத்தது - 1 டேபிள்ஸ்பூன்

 

தக்காளிச்சாறு -1/2 கப்

 

மிளகாய்த்தூள் - 1 டீஸ்பூன்

 

கரம் மசாலாத்தூள் - 1/2 டீஸ்பூன்

 

உப்பு - தேவையான அளவு

 

நெய் - 1 டேபிள்ஸ்பூன்

 

எண்ணெய் - 1 டேபிள்ஸ்பூன்

 

செய்முறை:

 

பாஸ்மதி அரிசியை உதிர் சாதமாக முக்கால் பதத்துக்கு வடித்துக் கொள்ளவும். எண்ணெய் மற்றும் நெய் இவற்றைச் சேர்த்து ஒரு வாணலியில் காய வைத்து முந்திரி அல்லது பாதாம் போட்டு வறுத்துக் கொள்ளவும். பிறகு குடமிளகாய் மற்றும் ஸ்வீட்ஃகார்ன் இவற்றை வதக்கி மிளகாய்த்தூள், கரம் மசாலாத்தூள்  உப்பு சேர்க்கவும். இத்துடன் தக்காளிச்சாறு சேர்த்துக் கொதிக்க விடவும். நன்கு கிளறிய பின் இந்தக் கலவை கெட்டியானதும் தீயைக் குறைத்து பாஸ்மதி சாதத்தைச் சேர்த்துக் கிளறி 5 நிமிடம் மூடி வைத்து பரிமாறவும்.

 

குடமிளகாயில், வைட்டமின் சத்துக்கள் நிறைய உள்ளன. நெய், குழந்தைகளின் வளர்ச்சிக்கு நல்லது.

No comments:

Post a Comment