Friday, 7 October 2016

தேங்காய்ப் பால் குழம்பு

தேங்காய்ப் பால் குழம்பு

தேங்காய்ப் பால் குழம்பு

 

தேவையானவை:

 

கலவையான காய்கறிகள் (பொடியாக நறுக்கியது) - 1/4 கிலோ

 

முதல் தேங்காய்ப்பால் - 1 கப்

 

2-ம் தேங்காய்ப்பால் - 2 கப்

 

வெங்காயம் - 1

 

தக்காளி -1

 

இஞ்சி-பூண்டு விழுது -2 டீஸ்பூன்

 

எலுமிச்சைச்சாறு - 2 டீஸ்பூன்

 

உப்பு - தேவையான அளவு

 

அரைக்க:

 

முந்திரிப்பருப்பு - 6

 

கொத்தமல்லித்தழை - ஒரு கைப்பிடி

 

பச்சை மிளகாய் - 3

 

பொட்டுக்கடலை - 1 டேபிள்ஸ்பூன்

 

தாளிக்க

 

எண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன்

 

கடுகு - 1 டீஸ்பூன்

 

சோம்பு - 1/2 டீஸ்பூன்

 

பட்டை - 1

 

கறிவேப்பிலை -சிறிதளவு

 

செய்முறை:

 

வெங்காயம், தக்காளி ஆகியவற்றைப் பொடியாக நறுக்கிக் கொள்ளவும். அரைக்கக் கொடுத்துள்ள பொருட்களை நன்றாக அரைத்துக் கொள்ளவும். எண்ணெயைக் காய வைத்து, தாளிக்கக் கொடுத்துள்ள பொருட்களைச் சேர்த்து வெங்காயம், தக்காளி, அரைத்த விழுது, இஞ்சி-பூண்டு விழுதையும் சேர்த்து மிதமான தீயில் பச்சை வாசனை போகும் வரை வதக்கவும். உப்பு சேர்த்து வதக்கி, 2-ம் தேங்காய்ப் பால் சேர்க்கவும். அவ்வப்போது கிளறி காய்கறிகளைச் சேர்த்து வேகவிட்டு பிறகு, முதல் தேங்காயப் பாலைச் சேர்க்கவும்.

 

2 நிமிடம் கழித்து இறக்கி, எலுமிச்சைச்சாறு மற்றும் கறிவேப்பிலை சேர்த்து சிறிது நேரம் மூடி வைத்துப் பரிமாறவும். தேங்காய்ப் பால் வயிற்றுப் புண் ஆற்றும். நாள் முழுவதுக்குமான சாப்பாட்டை சாப்பிட்ட நிறைவுத் தரும்.

No comments:

Post a Comment