பால்கோவா மோதகம்
பால்கோவா மோதகம்
தேவையானவை:
பால் - ஒரு லிட்டர்
சர்க்கரை - 80 கிராம்
ஏலக்காய்த்தூள் - கால் டீஸ்பூன்
குங்குமப்பூ - சிறிதளவு
நெய் - சிறிதளவு
மோதக மோல்ட் - தேவையான அளவு
செய்முறை:
கனமான அடிப்பகுதியுள்ள ஒரு பாத்திரத்தில் பாலை ஊற்றிக் காய்ச்சவும். பாதியாக சுண்டி வந்ததும் சர்க்கரையைச் சேர்த்து நன்கு கிளறவும். இரண்டும் ஒன்றாகச் சேர்ந்து பால்கோவா பதம் வந்தவுடன் ஏலக்காய்த்தூள், குங்குமப்பூ சேர்த்துக் கிளறி இறக்கவும். ஆறியவுடன், கட்டிகள் இல்லாமல் நன்றாகப் பிசைந்துகொள்ளவும். மோதக மோல்டில் (அச்சு) நெய்யைத் தடவி, பால்கோவாவை வைத்து மூடி திறந்தால், பால்கோவா மோதகம் ரெடி.
குறிப்பு:
இந்த மோதகத்தை பிள்ளையார் சதுர்த்திக்கு முதல் நாளே செய்து வைக்கலாம். நான்கு முதல் ஐந்து நாட்கள் வரை கெடாமல் நன்றாக இருக்கும்.

No comments:
Post a Comment