கஜூர் மோதகம்
கஜூர் மோதகம்
தேவையானவை:
பேரீச்சம்பழம் - 20
முந்திரி - 20
பாதாம் - 20
பிஸ்தா - 20
நெய் - அரை டீஸ்பூன்
செய்முறை:
அடுப்பில் வாணலியை வைத்து, நெய் விட்டு சூடானதும் முந்திரி, பாதாம், பிஸ்தாவைச் சேர்த்து லேசாக வறுத்து ஆறவைக்கவும். பிறகு மிக்ஸியில் சேர்த்து கொரகொரப்பாக அரைத்து, தனியாக எடுத்து வைக்கவும். பேரீச்சம்பழத்தின் கொட்டையை நீக்கிவிட்டு, சதைப்பகுதியை மட்டும் மிக்ஸியில் சேர்த்து அரைத்துக் கொள்ளவும். பேரீச்சம்பழ விழுது, அரைத்த பருப்பு கலவை இரண்டையும் ஒன்றாகக் கலந்து பிசைந்துகொள்ளவும். மோதக அச்சில் சிறிது நெய்யைத் தடவி பிசைந்து வைத்திருக்கும் கலவையை வைத்து மூடியெடுத்தால், ரிச்சான கஜூர் மோதகம் ரெடி.

No comments:
Post a Comment