Monday, 3 October 2016

3 நிமிட அவன் அல்வா

3 நிமிட அவன் அல்வா

3 நிமிட அவன் அல்வா

 

தேவையானவை:

 

 கார்ன்ஃப்ளார் - கால் கப்

 சர்க்கரை - முக்கால் கப்

 தண்ணீர் - ஒரு கப்

 ஏலக்காய்த்தூள் - அரை டீஸ்பூன்

 வறுத்த முந்திரி - தேவையான அளவு

 நெய் - 2 டீஸ்பூன்

 மஞ்சள் நிற ஃபுட் கலர் - சிறிது

 

செய்முறை:

 

நெய், முந்திரி தவிர தேவையானவற்றில் கொடுத்துள்ள மற்ற அனைத்து பொருட்களையும் ஒரு மைக்ரோவேவ் அவன் பாத்திரத்தில் சேர்த்து நன்கு கலக்கி அவனில் வைத்து மூடவும். பிறகு ஹை பவரில் 3 நிமிடங்கள் வேகவைத்து எடுக்கவும். ஒவ்வொரு நிமிடம் முடிந்ததும் அவனை திறந்து கலவையை கிளறிவிட்டு பிறகு மூடி வேகவிடவும். இடையே ஃபுட் கலரை கலந்து கிளறிவிடவும். மூன்று நிமிடத்துக்குப் பிறகு வெளியே எடுத்து நெய் மற்றும் வறுத்த முந்திரியைச் சேர்த்துக் கலந்து பரிமாறவும்.

 

குறிப்பு:

 

அல்வாவை நறுக்கி பீஸ் போடவேண்டும் என்றால் மேலும் ஒரு நிமிடம் வேகவைத்து கெட்டியான பிறகு வெளியே எடுத்து நெய் தடவிய தட்டில் கொட்டி பீஸ் போடலாம்.

 

No comments:

Post a Comment