Tuesday, 4 October 2016

பாலடை கேரட் கீர்

பாலடை கேரட் கீர்

பாலடை கேரட் கீர்

 

தேவையானவை:

 

 பாலடை, பால் - தலா கால் கப்

 நறுக்கிய கேரட் - ஒன்று

 சர்க்கரை - அரை கப்

 மில்க்மெய்ட் - 3 டேபிள்ஸ்பூன்

 ஏலக்காய்த்தூள் - ஒரு டீஸ்பூன்

 நெய் - 4 டேபிள்ஸ்பூன்

 முந்திரித் துண்டுகள் - ஒரு டேபிள்ஸ்பூன்

 

அலங்கரிக்க:

 

 சீவிய பாதாம் துண்டுகள் - 2 டேபிள்ஸ்பூன்.

 

செய்முறை:

 

கனமான அடிப்பகுதியுள்ள ஒரு பாத்திரத்தில் 3 டேபிள்ஸ்பூன் நெய் விட்டு, முந்திரியை வறுத்து தனியே வைக்கவும். மீதியுள்ள நெய்யில் பாலடையை வறுத்து, தனியே எடுத்துவைக்கவும். ஒரு பாத்திரத்தில் கால் கப் பால் மற்றும் கால் கப் தண்ணீர் சேர்த்து ஒரு கொதி வந்ததும், வறுத்த பாலடையைச் சேர்த்து வேகவிடவும். மற்றொரு பாத்திரத்தில் கேரட்டை தேவையான அளவு தண்ணீர் ஊற்றி, வேகவைத்து எடுத்து தண்ணீரை இறுத்துவிட்டு அரைத்துக்கொள்ளவும். பாலடை வெந்ததும் சர்க்கரையைச் சேர்த்துக் கரையவிடவும். இத்துடன் அரைத்த கேரட்டைச் சேர்த்து மீண்டும் ஒரு கொதி வர விட்டு பிறகு மில்க்மெய்ட், ஏலக்காய்த்தூள், வறுத்த முந்திரி சேர்த்து இறக்கவும். பரிமாறும்போது பாதாம் தூவிப் பரிமாறவும்.

 

குறிப்பு:

 

மில்க்மெய்டுக்குப் பதிலாக, ஒரு டேபிள்ஸ்பூன் பேரீச்சை சிரப்பும் சேர்க்கலாம். பாலடை கேரட் கீர், சூடாகவோ அல்லது குளிரவைத்தோ சுவைக்கக்கூடியது.

 

 

No comments:

Post a Comment