பாலடை தயாரிப்பது எப்படி?
பாலடை தயாரிப்பது எப்படி?
தேவையானவை:
பச்சரிசி - 2 கப்
உப்பு - தேவையான அளவு
வாழை இலை, நூல் - தேவையான அளவு
செய்முறை:
பச்சரிசியை ஒரு மணி நேரம் ஊறவைத்து, தண்ணீரை இறுத்து, கிரைண்டரில் உப்பு சேர்த்து இட்லி மாவை விட கெட்டியான பதத்துக்கு தண்ணீர்விட்டு அரைக்கவும். வாழை இலை காம்பு இல்லாத பகுதியை வட்டமாக கட் செய்து கொள்ளவும். இனி, வாழை இலையைக் கழுவி, அதில் அரைத்த மாவை ஒரு கரண்டி எடுத்து தோசை போல் ஊற்றி ஆவியில் 5 நிமிடம் வேகவிட்டு எடுக்கவும்.
பாலடை வெந்ததும் விருப்பமான வடிவில் கட் செய்து, வெயிலில் நன்கு காயவைத்து எடுத்து காற்றுப்புகாத டப்பாவில் வைத்தால் 2 மாதங்கள்வரை கெடாது.
குறிப்பு:
இங்குள்ள ரெசிப்பிக்கு காயவைத்து துகள்களாக்கிய பாலடைதான் உபயோகப்படுத்தியிருக்கிறோம்.
தற்போது சூப்பர் மார்க்கெட்டுகளில் நீளமாகவும், பொடியாகவும் ரெடிமேடாகவே கிடைக்கிறது. 'பிளைன் பாலடை' எனக் கேட்டு வாங்கவும். பாயச மிக்ஸ் பாலடையில் இனிப்பு, ஏலக்காய் சேர்ந்திருக்கும். அது ஸ்வீட் செய்ய மட்டும்தான் உபயோகமாகும். பிளைன் பாலடை இனிப்பு, காரம் எல்லாவற்றுக்கும் பயன்படும்.

No comments:
Post a Comment