Sunday 9 October 2016

டோஃபு புரோட்டா சாண்ட்விச்

டோஃபுபுரோட்டாசாண்ட்விச்

டோஃபுபுரோட்டாசாண்ட்விச்

 

என்னென்ன தேவை?

 

புரோட்டாவிற்கு...

 

மைதா - 1 டம்ளர்,

சர்க்கரை - 1/2 டீஸ்பூன்,

உப்பு - 1/4 டீஸ்பூன்,

தண்ணீர் -  தேவைக்கு,

உருக்கிய நெய் அல்லது வெண்ணெய் - 1 டீஸ்பூன்,

டோஃபு (சோயாபனீர்) - 1/4 கிலோ,

மிளகு தூள் - 1/2 டீஸ்பூன்,

சோயா சாஸ் - 1 டீஸ்பூன்,

உப்பு - தேவைக்கு,

பூண்டு விழுது - 1/2 டீஸ்பூன்.

 

சாண்ட்விச்சுக்கு...

 

புரோட்டா, பொரித்த டோஃபு, கேரட், வல்லாரை கீரை, மயோனைஸ், இனிப்பு புளிப்பு கெட்சப்.

 

எப்படிச் செய்வது?

 

புரோட்டாவிற்கு கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து குழைத்து 1/2 மணி நேரம் ஊறவைத்து திரட்டி லேயர்களாக போட்டு மடித்து புரோட்டா செய்யவும். டோஃபுவை நீளவாக்கில் ஸ்டிக் போல வெட்டி மசாலா தடவி தோசை தவாவில் பொரித்து எடுக்கவும். புரோட்டாவில் மயோனைஸ் தடவி டோஃபு, வல்லாரை இலை, கேரட்டை வைத்து மேலே லேசாக கெட்சப் தெளித்து ரோல் செய்யவும். சுவையான டோஃபு புரோட்டா சாண்ட்விச் ரெடி. சிக்கனுக்கு பதில் டோஃபு பயன்படுத்தப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment