வரகு பிள்ளையார்ப்பட்டி மோதகம்
வரகு பிள்ளையார்ப்பட்டி மோதகம்
தேவையானவை:
வரகு - கால் கப்
பாசிப்பருப்பு - கால் கப்
வெல்லம் - ஒரு கப்
துருவிய தேங்காய் - கால் கப்
நெய் - 2 டேபிள்ஸ்பூன்
ஏலக்காய் - 2
தண்ணீர் - 3 கப்
செய்முறை:
வரகு பாசிப்பருப்பு இரண்டையும் வெறும் வாணலியில் தனித்தனியாக வறுத்துக் கொள்ளவும். ஆறியவுடன் மிக்ஸியில் சேர்த்து கொரகொரப்பாக (ரவை பதத்துக்கு) அரைத்துக் கொள்ளவும். அரைத்த ரவையுடன் தண்ணீர் சேர்த்து அடுப்பில் வைத்து தீயைக் குறைத்து வேகவிடவும். இல்லாவிட்டால் அடிப்பிடித்துவிடவும். இடையிடையே கிளறி விடவும். வெல்லத்தில் சிறிது தண்ணீர் சேர்த்து, அடுப்பில் வைத்து கரைத்து வடிகட்டி வெந்த ரவையில் ஊற்றிக் கிளறவும். கடைசியாக ஏலக்காய், தேங்காய்த்துருவல், நெய் சேர்த்து கிளறி ஆறவைக்கவும். ஆறியவுடன் உருண்டைகளாகப் பிடித்து ஆவியில் பத்து நிமிடம் வேகவைக்கவும்.
குறிப்பு:
ரவை வேகும்போது, தண்ணீர் தேவைப்பட்டால் சிறிது தண்ணீரை சுடவைத்து ஊற்றவும்.

No comments:
Post a Comment