Tuesday, 4 October 2016

கவுனி அரிசி பேரீச்சை கீர்

கவுனி அரிசி பேரீச்சை கீர்

கவுனி அரிசி பேரீச்சை கீர்

 

தேவையானவை:

 

 கவுனி அரிசி - 4 டேபிள்ஸ்பூன்

 பால் - ஒரு லிட்டர்

 பேரீச்சம்பழம் - 20

 கண்டன்ஸ்டு மில்க் - 4 டேபிள்ஸ்பூன்

 துருவிய பாதாம் பருப்பு - 10

 ரோஸ் வாட்டர் - 4 சொட்டுகள்

 

செய்முறை:

 

கவுனி அரிசியை ஒரு பாத்திரத்தில் சேர்த்து அது மூழ்கும் அளவுக்கு தண்ணீர் ஊற்றி 2 மணி நேரம் ஊறவிடவும். பேரீச்சம்பழத்தின் கொட்டையை நீக்கிவிட்டு தண்ணீர் சேர்க்காமல் மிக்ஸியில் சேர்த்து அரைத்துக் கொள்ளவும். ஊறவைத்த கவுனி அரிசியின் தண்ணீரை வடித்துவிட்டு உலர வைக்கவும். பிறகு, லேசான ஈரப்பதத்தோடு இருக்கும் அரிசியை மிக்ஸியில் சேர்த்து ரவை பதத்துக்கு உடைத்துக்கொள்ளவும். குக்கரை அடுப்பில் வைத்து பாலை ஊற்றி, ஒரு கொதி வந்ததும், உடைத்த அரிசியைச் சேர்த்து மூடிபோட்டு 4 விசில் வரும் வரை வேகவிடவும். வெந்தவுடன் அதனுடன் அரைத்த பேரீச்சம்பழ விழுது, கண்டன்ஸ்டு மில்க் சேர்த்துக் கலக்கி கொதிக்கவிடவும். கலவை எல்லாம் நன்கு சேர்ந்து வந்ததும், துருவிய பாதாம், ரோஸ்வாட்டர் சேர்த்துக் கலக்கி சூடாகவோ, குளிர வைத்தோ பரிமாறவும்.

 

 

No comments:

Post a Comment