Wednesday, 5 October 2016

தினை அரிசி சாம்பார் சாதம்

தினை அரிசி சாம்பார் சாதம்

தினை அரிசி சாம்பார் சாதம்

 

தேவையானவை:

 

கேரட், பீன்ஸ், பச்சைப் பட்டாணி, உருளைக்கிழங்கு - 250 கிராம்

தினை அரிசி - 125 கிராம்

துவரம் பருப்பு - 125 கிரம்

தக்காளி - 1 (பொடியாக நறுக்கவும்)

பெரிய வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கவும்)

மிளகாய்த்தூள் - அரை டீஸ்பூன்

சாம்பார் பொடி - 1 டீஸ்பூன்

மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன்

சீரகத்தூள் - அரை டீஸ்பூன்

மல்லித்தூள் (தனியாத்தூள்)  - அரை டீஸ்பூன்

சீரகம் - கால் டீஸ்பூன்

கடுகு - கால் டீஸ்பூன்

கறிவேப்பிலை - சிறிதளவு

கொத்தமல்லித்தழை - 2 டேபிள்ஸ்பூன் (பொடியாக நறுக்கவும்)

வறுத்த முந்திரிப் பருப்பு  - 4 (அலங்கரிக்க‌)

எண்ணெய்  - 2 டேபிள்ஸ்பூன்

உப்பு - தேவையான அளவு

 

செய்முறை:

 

அரிசியைத் தனியாகவும், பருப்பைத் தனியாகவும் தண்ணீர் ஊற்றி, பதினைந்து நிமிடம் ஊற வைக்கவும். காய்கறிகளைக் கழுவி மீடியம் சைஸில் நறுக்கி வைக்கவும். பிரஷர் குக்கரில் எண்ணெய் விட்டு கடுகு, சீரகம் சேர்த்துப் பொரிய விடவும். இதில் கறிவேப்பிலை, வெங்காயம் சேர்த்து நிறம் மாற வதக்கவும். தக்காளியை சேர்த்து நன்றாக வதக்கி, மிளகாய்த்தூள், சீரகத்தூள், மஞ்சள்தூள், மல்லித்தூள் (தனியாத்தூள்), சாம்பார் பொடி சேர்த்து வதக்கி காய்கறிகள் உப்பு சேர்த்து வதக்கவும். இதில் அரிசி, பருப்பைச் சேர்த்து தேவையான அளவு தண்ணீர் ஊற்றி, மூன்று விசில் வந்ததும் இறக்கி விடவும். சூடு ஆறியதும் கொத்தமல்லித்தழை, முந்திரிப்பருப்பு தூவி, சிப்ஸ் அல்லது அப்பளத்துடன் பரிமாறவும்.

 

No comments:

Post a Comment