Friday, 7 October 2016

ரா பனானா அண்ட் பம்ப்கின் மஃபின்

ரா பனானா அண்ட் பம்ப்கின் மஃபின்

ரா பனானா அண்ட் பம்ப்கின் மஃபின்

 

தேவையானவை:

 

முட்டை - 1

மீடியம் சைஸ் வாழைப்பழம் - 1 (மசித்தது)

பிரவுன் சுகர் (பழுப்பு சர்க்கரை) - 25 கிராம் (டிப்பார்ட்மெண்ட் ஸ்டோரில் கிடைக்கும்)

மஞ்சள் பூசணி பியூரி - 50 கிராம்

ஆலிவ் ஆயில் - 2 டேபிள்ஸ்பூன்

வெனிலா எசன்ஸ் - அரை டீஸ்பூன்

ராகி மாவு - 75 கிராம்

மைதா - 25 கிராம்

பேக்கிங் சோடா - அரை டீஸ்பூன்

பேக்கிங் பவுடர் - ஒன்றரை டீஸ்பூன்

உப்பு - கால் டீஸ்பூன்

தண்ணீர் - தேவையான அளவு

 

செய்முறை:

 

முட்டையை ஒரு பவுலில் உடைத்து நன்கு அடித்து வைக்கவும். பூசணியின் சதைப்பகுதியை மட்டும் எடுத்து தண்ணீர் ஊற்றி,வேக வைக்கவும். பின்பு தண்ணீரை இறுத்து ஆறியதும் மிக்ஸியில் கூழாக அரைக்கவும். இதில் இருந்து 50 கிராம் தனியாக எடுத்து வைக்கவும். இனி முட்டையில் பூசணி பியூரி, சர்க்கரை சேர்த்து மீண்டும் ஹேண்ட் பீட்டரால் நன்கு அடிக்கவும். இதில் மசித்த வாழைப்பழத்தைச் சேர்த்து நன்கு அடித்துக் கலக்கவும். கட்டிகள் விழாமல் அடித்துக் கலக்க வேண்டும். இதில் வெனிலா எசன்ஸ், ஆலிவ் ஆயில் சேர்த்து மீண்டும் பீட்டரால் அடித்து தனியாக வைக்கவும். ராகி, மைதாவை சலித்து ஒன்றாக பேக்கிங் பவுடர், பேக்கிங் சோடா, உப்பு சேர்த்துக் கலக்கவும். இதில் தேவையான அளவு தண்ணீர் கலந்து மாவு பசை போன்ற வடிவம் வரும் வரை கலக்கி வைக்கவும். பேக்கிங் அவனை 180 டிகிரி செல்ஷியஸில் பத்து நிமிடம் சூடுபடுத்தவும்.

மஃபின் தட்டுகளின் உள்ளே மஃபின் லைனரை வைத்து, அதன் உள்ளே சிறிது எண்ணெயை ஸ்பிரே செய்யவும். ஒவ்வொரு மஃபின் லைனர் உள்ளேயும் இரண்டு டேபிள்ஸ்பூன் மாவை எடுத்து வைக்கவும். இனி மஃபின் பேனை அவனின் மிடில் ரேக்கில் வைத்து,

 

180 டிகிரி செல்ஸியஸில் 15 முதல் 18 நிமிடம் வரை வேக விடவும்.இடையே அவனை திறந்து டூத்பிக்கால் மஃபின் நடுவே குத்தி பார்த்தால் மாவு வெந்துவிட்டதா என்பது தெரியும்.  மாவு ஒட்டாமல் வந்தால், மஃபின் வெந்துவிட்டது என்று அர்த்தம். அவனில் இருந்து பேனை எடுத்து கூலிங் ரேக்கில் வைத்து சூடு சுத்தமாக ஆறியதும் மஃபினை பேனில் இருந்து லைனரோடு எடுத்து தட்டில் வைத்துப் பரிமாறவும்.

 

 

No comments:

Post a Comment