Sunday, 2 October 2016

கடலைக் கறி

கடலைக் கறி

கடலைக் கறி

 

தேவையானவை:

 சின்ன கொண்டைக்கடலை - 2 கப் (வேக வைத்தது)

 இஞ்சி-பூண்டு பேஸ்ட் - 1 டேபிள்ஸ்பூன்

 மீடியம் சைஸ் பெரிய வெங்காயம் -  2 (பொடியாக நறுக்கியது)

 பச்சை மிளகாய் - 1 (உடைத்துக் கொள்ளவும்)

 தக்காளி - 1

 துருவிய தேங்காய் - முக்கால் கப்

 மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன்

 மிளகாய்த்தூள் - 1 டேபிள்ஸ்பூன்

 மல்லித்தூள் (தனியாத்தூள்) - 4 டீஸ்பூன்

 கேரளா கரம் மசாலாத்தூள் - 1 டீஸ்பூன்

 உப்பு - தேவையான அளவு

 எண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன்

 கடுகு - 1 டீஸ்பூன்

 பெருங்காயத்தூள் - 1 சிட்டிகை

 எண்ணெய் - 1 டீஸ்பூன்

 காய்ந்த மிளகாய் - 2

 கறிவேப்பிலை - 8 இலைகள்

 கொத்தமல்லித்தழை - சிறிதளவு

 

செய்முறை:

கொண்டைக்கடலையை தண்ணீர் ஊற்றி, ஒரு நாள் இரவு முழுவதும் ஊற வைக்கவும். மறுநாள் தண்ணீரை வடித்துவிட்டு, குக்கரில் உப்பு சேர்த்து மூன்று விசில் வரை வேக விடவும். அடுப்பில் வாணலியை வைத்து, அரை டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி, தேங்காயைச் சேர்த்து குறைந்த தீயில் பொன்னிறமாகும் வரை வறுத்து ஆற விட்டு, மிக்ஸியில் விழுதாக தண்ணீர் விட்டு அரைத்து வைக்கவும்.

தக்காளியை மீடியம் சைஸில் நறுக்கிக் கொள்ளவும். அடுப்பில் வாணலியை வைத்து கடுகு, பெருங்காயம், இஞ்சி-பூண்டு விழுது, பச்சை மிளகாய் சேர்த்து பச்சை வாசனை போக வதக்கவும். இதில் நறுக்கிய வெங்காயத்தைச் சேர்த்து நிறம் மாற வதக்கி, தக்காளி சேர்த்து கரையும் வரை வதக்கவும். இத்துடன் மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், மல்லித்தூள் (தனியாத்தூள்), உப்பு சேர்த்து பச்சை வாசனை போக வதக்கி, ஒரு டேபிள்ஸ்பூன் தண்ணீர் ஊற்றி வேக விடவும். இதில் வேக வைத்த கடலையை தண்ணீரோடு சேர்த்து, அரைத்த தேங்காய் விழுதையும் சேர்த்து சில நிமிடம் வேக விடவும். இதில் இருந்து சிறிதளவு கொண்டைக்கடலையை எடுத்து, மிக்ஸியில் பேஸ்ட்டாக அரைத்து வெந்து கொண்டிருக்கும் கிரேவியில் சேர்த்துக் கிளறவும். இத்துடன் கரம் மசாலாத் தூளைச் சேர்த்து தேவைப்பட்டால் தண்ணீர் சேர்த்து குறைந்த தீயில் எல்லாம் ஒன்று சேர்ந்து வரும் வரை வேக விடவும். அடுப்பில் ஒரு வாணலியை வைத்து, இரண்டு டீஸ்பூன் எண்ணெய் விட்டு காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை சேர்த்துத் தாளித்து கிரேவியில் சேர்த்துக் கிளறி கொத்தமல்லித்தழை, கறிவேப்பிலை சேர்த்துத் தூவி இறக்கவும். புட்டு, ஆப்பம், சப்பாத்தி மற்றும் சாதத்துடன் பரிமாறவும்.

 

No comments:

Post a Comment