Saturday 8 October 2016

பொட்டுக்கடலை லட்டு

பொட்டுக்கடலை லட்டு

 

தேவையானவை: பொட்டுக்கடலை  ஒரு கப், துருவிய வெல்லம்  ஒரு கப், ஏலக்காய்ப்பொடி  ஒரு டீஸ்பூன், தண்ணீர்  கால் கப், நெய்  சிறிது

 

செய்முறை: மிக்ஸியில் பொட்டுக்கடலையைப் போட்டு நைஸாக அரைத்து அதனுடன் ஏலக்காய்ப் பொடியைக் கலந்து வைத்துக் கொள்ளவும். அடுப்பில் கடாயை வைத்து வெல்லம் மற்றும் தண்ணீரைச் சேர்த்துக் கரைந்ததும் அடுப்பை அணைத்து வடிகட்டி வைக்கவும். வடிகட்டிய வெல்ல சிரப்பை மீண்டும் அடுப்பில் ஏற்றி, குறைந்த தீயில் ஒரு நிமிடம் கிண்டி இறக்கவும். இதனை அரைத்த பொட்டுக்கடலை மாவில் சேர்த்துக் கலந்து இளம்சூடாக இருக்கும்போதே கையில் நெய் தடவிக்கொண்டு உருண்டைப் பிடித்தால் பொட்டுக்கடலை லட்டு ரெடி.

 

No comments:

Post a Comment