Monday, 3 October 2016

ஓட்ஸ் பால் கொழுக்கட்டை

ஓட்ஸ் பால் கொழுக்கட்டை

ஓட்ஸ் பால் கொழுக்கட்டை

 

தேவையானவை:

 

 ஓட்ஸ் - அரை கப்

 பால் - ஒரு கப்

 நாட்டுச்சர்க்கரை - 4 டேபிள்ஸ்பூன்

 ஏலக்காய்த்தூள் - கால் டீஸ்பூன்

 பாதாம் - 4

 குங்குமப்பூ - சிறிதளவு

 நெய் - சிறிதளவு

 

செய்முறை:

 

ஓட்ஸை மிக்ஸியில் சேர்த்து நன்கு அரைத்து எடுத்துக் கொள்ளவும். பிறகு அரைத்த ஓட்ஸ் மாவுடன் சிறிது தண்ணீர் சேர்த்துப் பிசைந்து சிறுசிறு உருண்டைகளாக உருட்டிக் கொள்ளவும். பாலை ஒரு பாத்திரத்தில் ஊற்றி, அடுப்பில் வைத்துக் கொதிக்க விடவும். கொதிக்கும்போது உருட்டி வைத்துள்ள ஓட்ஸ் உருண்டைகளைச் சேர்த்து வேகவிடவும். ஓட்ஸ் உருண்டைகள் நன்கு வெந்தவுடன் நாட்டுச்சர்க்கரை, ஏலக்காய்த்தூள், குங்குமப்பூ சேர்க்கவும். பாலில் நாட்டுச் சர்க்கரை கரைந்தவுடன் அடுப்பிலிருந்து இறக்கவும். பாதாமை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி, ஓட்ஸ் பால் கொழுக்கட்டை மேல் தூவிப் பரிமாறவும்.

 

குறிப்பு:

 

ஓட்ஸ் மாவை உருண்டைகளாக உருட்டும் போது, கையில் மாவு ஒட்டிக் கொண்டால், சிறிது நெய்யைத் தடவிக்கொண்டு உருட்டவும்.

 

No comments:

Post a Comment