Sunday, 2 October 2016

விருதுநகர் பொரிச்ச பரோட்டா

விருதுநகர் பொரிச்ச பரோட்டா

விருதுநகர் பொரிச்ச பரோட்டா

 

தேவையானவை:

 

மைதா மாவு - 1 கப்

உப்பு - தேவையான அளவு

தண்ணீர் - தேவையான அளவு

எண்ணெய் - தேவையான அளவு

சர்க்கரை - சிறிதளவு

 

செய்முறை :

 

ஒரு பாத்திரத்தில் மைதாமாவு, சிறிதளவு உப்பு மற்றும் சர்க்கரை சேர்த்து நன்றாகக் கலந்துகொள்ளவும். பின்னர் தண்ணீர் சேர்த்து மாவு பதத்தில் பிசைந்துகொள்ளவும். நன்றாகப் பிசைந்ததும் சிறிது எண்ணெய் சேர்த்துப் பிசைந்து கொள்ளவும். பின்னர் ஈரமான துணியைக் கொண்டு மூன்று முதல் நான்கு மணி நேரம் வரை மாவை மூடி வைத்திருக்கவும். பிறகு, இதை இரண்டு பாகங்களாகப் பிரித்து சிறிய உருண்டைகளாகப் பிடித்து சப்பாத்தி மாவுக்குத் தட்டுவது போல் மெலிதாகத் தட்டவும். பிறகு, ஒரு மூலையிலிருந்து மெல்ல மடிப்பு மடிப்பாக ரோல் செய்யவும். மீண்டும் உருட்டித்தட்டவும். ஒரு தவாவில் எண்ணெய் ஊற்றி, இரண்டு புறமும் நன்கு மொறுமொறுப்பாக வேகவைக்கவும். பிறகு, கடாயில் கொதிக்கும் எண்ணெயில் பொரித்து எடுக்கவும். இதை சால்னாவுடன் சேர்த்துப் பரிமாறவும்.

 

No comments:

Post a Comment