சாக்லேட் டார்ட்
சாக்லேட் டார்ட்
டார்ட் செய்ய தேவையானவை:
மைதா மாவு - அரை கப்
பொடித்த சர்க்கரை - கால் கப்
வெனிலா கஸ்டர்ட் - அரை டேபிள்ஸ்பூன்
பேக்கிங் பவுடர் - கால் டீஸ்பூன்
வெண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன்
பால் - ஒரு டேபிள்ஸ்பூன்
டார்ட் மோல்ட் - தேவையான அளவு
செய்முறை:
டார்ட் மோல்ட் தவிர்த்து மேலே கொடுத்துள்ள அனைத்துப் பொருட்களையும் ஒரு பவுலில் கலந்து சப்பாத்திக்கு மாவு பிசைவது போல பிசைந்துகொள்ளவும். பிசைந்த மாவை சிறிது சிறிதாக எடுத்து டார்ட் மோல்டில் அழுத்தி வைக்கவும். பிறகு ஒரு போர்க் கொண்டு மாவின் 3 இடங்களில் குத்திவிடவும். மீதம் இருக்கும் மாவுகள் அனைத்தையும், மீதம் இருக்கும் மோல்டுகளில் நன்கு அழுத்திவிடவும். இனி வெண்ணெய் தடவிய ஒரு பேக்கிங் டிரேயில் டார்ட் மோல்டுகளை வரிசையாக அடுக்கி அவன் உள்ளே வைக்கவும்.
கன்வெக்ஷன் மோடில் 180 டிகிரி செல்ஷியஸில் 15 நிமிடங்கள் டார்ட்கள் பொன்னிறமாகும் வரை வேகவிடவும். பிறகு வெளியே எடுத்து மோல்டில் இருந்து டார்ட்டை பிரித்தெடுத்து ஆறவிடவும்.
டார்ட்டின் உள்ளே வைக்கும் ஃபில்லிங்குக்கு:
கார்ன்ஃப்ளார் - ஒரு டேபிள்ஸ்பூன்
கோகோ பவுடர் - ஒரு டேபிள்ஸ்பூன்
சர்க்கரை - கால் கப்
இன்ஸ்டன்ட் காபி பவுடர் - கால் டீஸ்பூன்
தண்ணீர் - முக்கால் கப்
அலங்கரிக்க:
டூட்டிஃப்ரூட்டி/பாதாம் பவுடர்/ பிஸ்தா - சிறிதளவு
செய்முறை:
ஃபில்லிங்குக்கு கொடுத்துள்ள அனைத்துப் பொருட்களையும் ஒரு மைக்ரோவேவ் அவன் பவுலில் சேர்த்துக் கலக்கவும். பிறகு, அவனின் உள்ளே வைத்து ஹை பவரில் 2 நிமிடங்கள் வேகவைத்து எடுக்கவும். பிறகு வெளியே எடுத்து ஆறவிட்டு, டார்ட் பிஸ்கட்டில் சிறிது சிறிதாக ஊற்றவும். அலங்கரிக்க கொடுத்தவற்றை டார்ட்டின் மேல் தூவி அலங்கரித்து பரிமாறவும்.
குறிப்பு:
டார்ட் மோல்ட் இல்லையென்றால் சிறு சிறு அலுமினிய கிண்ணங்கள் உபயோகப்படுத்தலாம்.

No comments:
Post a Comment