Sunday, 2 October 2016

பாலக்காடு சாம்பார்

பாலக்காடு சாம்பார்

பாலக்காடு சாம்பார்

 

தேவையானவை:

 துவரம் பருப்பு -  கால் கப்

 பெரிய வெங்காயம் - 1 (நீளமாக நறுக்கவும்)

 தக்காளி - 2 (மீடியம் சைஸில் நறுக்கவும்)

 வெண்டைக்காய் - 2

 முருங்கைக்காய் - 2 (விருப்பமான வடிவில் நறுக்கவும்)

 கல்யாணபூசணிக்காய் - 50 கிராம்

 சேனைக்கிழங்கு - 1 கப்

 உருளைக்கிழங்கு - 1

 புளி - சின்ன எலுமிச்சை அளவு (ஊற வைத்து வடிகட்டவும்)

 மிளகாய்த்தூள் - 1 டீஸ்பூன்

 மஞ்சள்தூள் - அரை டீஸ்பூன்

 பெருங்காயம் - சிறிதளவு

 உப்பு - தேவையான அளவு

 கொத்தமல்லித்தழை - 5 இலைகள்

 மல்லி (தனியா) - 3 டேபிள்ஸ்பூன்

 கடலைப்பருப்பு - 2 டேபிள்ஸ்பூன்

 வெந்தயம் - 1 டீஸ்பூன்

 காய்ந்த மிளகாய் - 6

 கறிவேப்பிலை - 5 இலைகள்

 துருவிய தேங்காய் - 1 கப்

 தேங்காய் எண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன்

 

தாளிக்க:

 கடுகு - 1 டீஸ்பூன்

 காய்ந்த மிளகாய் - 2

 வெந்தயம் - அரை டீஸ்பூன்

 தேங்காய் எண்ணெய் - 1 டீஸ்பூன்

 

செய்முறை

காய்கறிகளை விருப்பமான வடிவத்தில் நறுக்கி வைக்கவும். துவரம்பருப்பை வேகவைத்துக் கொள்ளவும். அடுப்பில் வாணலியை வைத்து புளிக்கரைசல், மூன்று கப் தண்ணீர், காய்கறிகள், தக்காளி, வெங்காயம், மஞ்சள்தூள் மிளகாய்த்தூள், பெருங்காயம், உப்பு சேர்த்து குறைவான தீயில் மூடி போட்டு வேக வைக்கவும்.

அடுப்பில் வாணலியை வைத்து சிறிது தேங்காய் எண்ணெய் சேர்த்து மல்லி (தனியா), கறிவேப்பிலை, வெந்தயம், கடலைப்பருப்பு, காய்ந்த மிளகாய் சேர்த்து பொன்னிறமாக வறுக்கவும். இறுதியாக தேங்காய்த் துருவலைச் சேர்த்து வறுத்து ஆற வைத்து மிக்ஸியில் தண்ணீர் விட்டு  விழுதாக அரைத்து வைக்கவும். காய்கறிகள் வெந்ததும், வெந்த பருப்பை மசித்து காய்கறிகளோடு சேர்த்துத் தேவைப்பட்டால் தண்ணீர் சேர்த்துக் கொதிக்க விடவும். அரைத்த விழுதை சாம்பாரில் சேர்த்து பத்து நிமிடம் குறைந்த தீயில் வேக வைத்து, தாளிக்கக் கொடுத்தவற்றைச் சேர்த்துத் தாளித்துப் பரிமாறவும்.

 

 

No comments:

Post a Comment