மூங் தால்
மூங் தால்
தேவையானவை:
உடைத்த பயத்தம்பருப்பு - அரை கப்
பூண்டு - 3 பல்
மிளகாய்த்தூள் - அரை டீஸ்பூன்
மல்லித்தூள் (தனியாத்தூள்) - கால் டீஸ்பூன்
மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன்
கடுகு - கால் டீஸ்பூன்
சீரகம் - கால் டீஸ்பூன்
எண்ணெய் - ஒரு டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
அடுப்பில் சாஸ்பேனை வைத்து உடைத்த பயத்தம்பருப்பைச் சேர்த்து அது மூழ்கும் அளவுக்கு தண்ணீர் ஊற்றி வேகவிடவும். இத்துடன் மஞ்சள்தூள் மற்றும் பூண்டு சேர்த்து வேகவிடவும். பருப்பை நன்கு மசிய வேகவிடவும். பிறகு, மத்தால் பருப்பைக் கடைந்து அடுப்பை அணைத்துவிடவும். அடுப்பில் மற்றொரு வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றி கடுகு, சீரகம் சேர்த்துத் தாளிக்கவும். பிறகு, மிளகாய்த்தூள், மல்லித்தூள் (தனியாத்தூள்) சேர்த்து சிறிது தண்ணீர் தெளித்து வதக்கவும். பிறகு அடுப்பை அணைத்து வதக்கியவற்றை மசித்த பருப்பில் சேர்த்து அடுப்பில் வைத்துக் கிளறவும். சிறிதளவு உப்பு மற்றும் தேவைப்பட்டால் தண்ணீர் சேர்த்து பருப்பு கொதித்ததும், இறக்கி கோபா ரொட்டியுடன் பரிமாறவும்.

No comments:
Post a Comment