கோபா ரொட்டி
கோபா ரொட்டி
தேவையானவை:
மைதா மாவு - 2 கப்
ஓமம் - அரை டீஸ்பூன்
நெய் - 2 டேபிள்ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
வாய் அகன்ற ஒரு பாத்திரத்தில் மைதா மாவு, 2 டீஸ்பூன் நெய், ஓமம், உப்பு சேர்த்துக் கொள்ளவும். பிறகு மாவில் சிறிது சிறிதாக தண்ணீர் விட்டு வழக்கமான ரொட்டி மாவைவிட சற்று திக்காகப் பிசையவும். அப்படியே மூடி வைத்து 10 முதல் 15 நிமிடங்கள் ஊறவிடவும்.
அடுப்பில் தோசைக்கல்லை வைத்து தீயை சிம்மில் வைத்து சூடுபடுத்தவும். பிசைந்த மாவை இரண்டு பெரிய உருண்டைகளாக உருட்டிக்கொள்ளவும். உருட்டியவற்றை சற்று திக்கான ரொட்டிகளாக தட்டி தோசைக் கல்லில் வேகவிடவும். பிறகு மாவைத் திருப்பிப் போட்டு வேகவிடவும். இனி ரொட்டியின் மேற்பகுதியில் கட்டை மற்றும் ஆட்காட்டி விரலை ஒன்று சேர்த்து மாவைப் பிடித்து விடவும். அதாவது, கோலம் போட மாவை எடுப்பதுபோல ரொட்டியில் பிடித்து விடவும். (படம் பார்க்க)
இப்படி மேற்பகுதி முழுவதும் ஒரு இடம் விடாமல் பிடித்து விடவும். இனி, ரொட்டியின் அடிப்பகுதி நன்கு கிரிஸ்ப்பியாக வெந்ததும், ரொட்டியை எடுத்து கையால் பிடித்துவிட்ட பகுதியை மட்டும் நேரடி தீயில் காட்டவும். இரண்டு நிமிடம் நேரடி தீயில் காட்டி வேகவிட்டு, பிறகு தட்டி எடுத்து வைக்கவும். சற்று கருகலான கிரிஸ்பி கோபா ரொட்டி ரெடி.
பரிமாறும் முன்பு ரொட்டியின் மேற்பகுதியில் உள்ள குழிகளில் எல்லாம் தாராளமாக நெய் விட்டு மூங் தாலுடன் சேர்த்துப் பரிமாறவும்.

No comments:
Post a Comment