புரோக்கோலி லெமன் போஹா
புரோக்கோலி லெமன் போஹா
தேவையானவை:
அவல் - ஒன்றேகால் கப்
புரோக்கோலி - ஒரு கப் (சின்னச் சின்னப் பூக்களாக நறுக்கவும்)
பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம் - 1
காய்ந்த மிளகாய் - 2 (இரண்டாக உடைக்கவும்)
கடுகு - அரை டீஸ்பூன்
சீரகம் - கால் டீஸ்பூன்
கடலைப்பருப்பு - ஒரு டேபிள்ஸ்பூன்
உளுத்தம்பருப்பு - அரை டேபிள்ஸ்பூன்
முந்திரிப்பருப்பு - 7 அல்லது 8
எலுமிச்சை - 1
மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - ஒரு டேபிள்ஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிதளவு
கொத்தமல்லித்தழை - சிறிதளவு
செய்முறை:
அடுப்பில் கடாயை வைத்து மூன்று கப் தண்ணீர் ஊற்றிக் கொதிக்க விடவும். இதில் புரோக்கோலியைச் சேர்த்து இரண்டு நிமிடம் வேக விடவும். அடுப்பை அணைத்து தண்ணீரை இறுத்து புரோக்கோலியை குளிர்ந்த நீரில் அலசி தனியே எடுத்து வைக்கவும். அவலை அலசி தண்ணீர் இறுத்து தனியாக வைக்கவும். எலுமிச்சையைப் பிழிந்து, சாறு எடுத்து சிறிது தண்ணீர் கலந்து தனியாக வைக்கவும். அடுப்பில் கடாயை வைத்து, எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, சீரகம் போட்டு வெடிக்க விட்டு, இத்துடன் கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு, முந்திரிப்பருப்பைச் சேர்த்து பொன்னிறமாகும் வரை வறுக்கவும். இதில் கறிவேப்பிலை, காய்ந்த மிளகாய், வெங்காயம் சேர்த்து, வெங்காயத்தின் நிறம் மாறும் வரை வதக்கவும். பிறகு புரோக்கோலி, மஞ்சள்தூள் சேர்த்துப் புரட்டி முன்று நிமிடம் வதக்கவும். இத்துடன் அவல், தேவையான அளவு உப்பு சேர்த்து ஒரு நிமிடம் வதக்கி, அடுப்பை அணைத்து இறக்கும் போது எலுமிச்சைச்சாறு, கொத்தமல்லித்தழை கலந்துப் பரிமாறவும்.

No comments:
Post a Comment