Tuesday, 4 October 2016

கவுனி அரிசி பச்சைப்பயறுப் புட்டு

கவுனி அரிசி பச்சைப்பயறுப் புட்டு

கவுனி அரிசி பச்சைப்பயறுப் புட்டு

 

தேவையானவை:

 

 கவுனி அரிசி மாவு - ஒரு கப்

 முளைகட்டிய பச்சைப்பயறு - அரை கப்

 உப்பு - தேவையான அளவு

 தேங்காய்த்துருவல் - கால் கப்

 நாட்டுச்சர்க்கரை - கால் கப்

 நெய் - ஒரு டீஸ்பூன்

 

செய்முறை:

 

கவுனி அரிசி மாவுடன் ஒரு டீஸ்பூன் நெய் சேர்த்துப் பிசிறவும். பிறகு, தேவையான அளவு உப்பு சேர்த்து வெதுவெதுப்பான நீரைத் தெளித்துப் பிசிறவும். கையில் மாவைப் பிடித்தால், பிடிக்க வர வேண்டும். இதுதான் புட்டு மாவு பதம். முளை கட்டிய பச்சைப்பயறுடன் உப்பு சேர்த்து பிசிறவும். பிறகு, புட்டுக் குழாயில் பிசிறிய கவுனி அரிசி மாவு, முளைகட்டிய பயறு, தேங்காய்த்துருவல், நாட்டுச்சர்க்கரை என்கிற வரிசையில் நிரப்பி, மூடி, ஆவியில் 10 நிமிடம் வேகவிட்டு எடுத்தால் புட்டு தயார்.

 

No comments:

Post a Comment