கட்டா கி சப்ஜி
கட்டா கி சப்ஜி
தேவையானவை:
கட்டா செய்ய:
கடலை மாவு - ஒரு கப்
ஓமம் - அரை டீஸ்பூன்
மிளகாய்த்தூள் - அரை டீஸ்பூன்
மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன்
சீரகத்தூள் - அரை டீஸ்பூன்
எண்ணெய் - ஒரு டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
கிரேவி செய்ய:
தயிர் - அரை கப்
மிளகாய்த்தூள் - அரை டிஸ்பூன் (காரத்துக்கேற்ப சேர்த்துக் கொள்ளவும்)
மல்லித்தூள் (தனியாத்தூள்) - ஒரு டீஸ்பூன்
மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன்
சீரகத்தூள் - அரை டீஸ்பூன்
கடுகு - கால் டீஸ்பூன்
சீரகம் - கால் டீஸ்பூன்
எண்ணெய் - ஒரு டீஸ்பூன்
கொத்தமல்லித்தழை - சிறிதளவு
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
கட்டா செய்ய கொடுத்துள்ளவற்றை எல்லாம் ஒரு பவுலில் சேர்த்து, சிறிது தண்ணீர் விட்டு திக்கான மாவாக நன்கு பிசைந்துகொள்ளவும். மற்றொரு பாத்திரத்தில் மாவு வேகும் அளவுக்கான தண்ணீரைச் சேர்த்து கொதிக்கவிடவும். பிசைந்த மாவை உள்ளங்கையில் வைத்து உருளை வடிவத்தில் உருட்டி, தண்ணீரில் சேர்த்து வேகவிடவும். மாவு வெந்ததை 'டூத்பிக்' கொண்டு குத்தி பார்த்துத் தெரிந்துகொள்ளவும். டூத்பிக்கில் மாவு ஒட்டாமல் வந்தால், வெந்துவிட்டது என்பதை அறியலாம்.மாவு வெந்ததும் தண்ணீரை இறுத்து ஆறவிடவும். ஆறிய பிறகு சின்னச்சின்ன துண்டுகளாக்கிக் கொள்ளவும்.
அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு, சீரகம் சேர்த்து பொரிய விடவும். பிறகு தீயை முற்றிலும் குறைத்து மிளகாய்த்தூள், மல்லித்தூள் (தனியாத்தூள்), மஞ்சள்தூள், சீரகத்தூள் சேர்த்து வதக்கி, சிறிது தண்ணீர் விட்டு பச்சை வாசனை போக வேகவிடவும். மசாலாக்கள் கருகிவிடக்கூடாது என்பதால், உடனே தண்ணீர் விடவும். இத்துடன் வேகவைத்த கட்டாக்களைச் சேர்த்து மசாலா உள்ளே இறங்குமளவுக்கு வேகவிடவும். பிறகு தீயை முற்றிலும் குறைத்து தேவையான அளவு உப்பு சேர்த்துக் கிளறவும். தயிரை கொஞ்சம் கொஞ்சமாக விட்டு கலக்கவும். கலவையோடு தயிர் நன்கு சேர்த்து எண்ணெய் பிரிந்து வரும். அதிக நேரம் கிளறிக்கொண்டே இருந்தால், தயிர் திரிந்துவிடும். பிறகு கொத்தமல்லித்தழை தூவி ரொட்டி, சப்பாத்தி, புல்காவுக்கு சைட் டிஷ்ஷாக பரிமாறலாம்.

No comments:
Post a Comment