Tuesday, 4 October 2016

கவுனி அரிசி காய்கறி ஊத்தப்பம்

கவுனி அரிசி காய்கறி ஊத்தப்பம்

கவுனி அரிசி காய்கறி ஊத்தப்பம்

 

தேவையானவை:

 

 கவுனி அரிசி - ஒரு கப்

 இட்லி அரிசி - ஒரு கப்

 உளுந்து - அரை கப்

 அவல் - கால் கப்

 வெந்தயம் - கால் டீஸ்பூன்

 உப்பு - தேவையான அளவு

 கேரட் - ஒன்று

 வெங்காயம் - ஒன்று

 முட்டைக்கோஸ் கொரு கைப்பிடி

 கொத்தமல்லித்தழை - சிறிதளவு

 இஞ்சித்துருவல் - ஒரு டீஸ்பூன்

 பச்சைமிளகாய் - 2

 எண்ணெய் - தேவையான அளவு

 

செய்முறை:

 

ஒரு பாத்திரத்தில் கவுனி அரிசி மற்றும் இட்லி அரிசியை ஒன்றாகவும், மற்றொரு பாத்திரத்தில் உளுந்து மற்றும் வெந்தயத்தை ஒன்றாகவும், அவலை தனியாகவும் 3 மணி நேரம் ஊறவிடவும்.

பிறகு எல்லாவற்றையும் கழுவி, கிரைண்டரில் ஒன்றாகச் சேர்த்து தேவையான அளவு தண்ணீர்விட்டு இட்லி மாவு பதத்துக்கு அரைத்து உப்பு சேர்த்து கலக்கி, 3 மணி நேரம் புளிக்க விடவும். வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் விட்டு சூடாக்கி, துருவிய கேரட், பொடியாக நறுக்கிய வெங்காயம், முட்டைக்கோஸ், பச்சைமிளகாய், இஞ்சித்துருவல், கொத்துமல்லித்தழை, உப்பு சேர்த்து வதக்கி, ஆறவிட்டு மாவில் கலக்கவும். பிறகு தோசைக் கல்லைச் சூடாக்கி, ஊத்தப்பம் ஊற்றி சுற்றிலும் எண்ணெய் விட்டு இருபுறமும் வேகவிட்டு எடுத்து சட்னியுடன் பரிமாறவும்.

 

 

No comments:

Post a Comment