கவுனி இனிப்பு (செட்டிநாடு ஸ்பெஷல்)
கவுனி இனிப்பு (செட்டிநாடு ஸ்பெஷல்)
தேவையானவை:
கவுனி அரிசி - ஒரு கப்
சர்க்கரை - முக்கால் கப்
ஏலக்காய்த்தூள் - கால் டீஸ்பூன்
தேங்காய்த்துருவல் - முக்கால் கப்
நெய் - 2 டேபிள்ஸ்பூன்
முந்திரி, பாதாம் - சிறிதளவு
செய்முறை:
சுத்தம் செய்த கவுனி அரிசியை 4 கப் நீரில் 4 மணி நேரம் ஊற விடவும். குக்கரை அடுப்பில் வைத்து ஊறிய அரிசியை தண்ணீருடன் சேர்த்து 3 விசில் வேகவிடவும். பிறகு, 15 நிமிடம் தீயை முற்றிலும் குறைத்து வேகவிட்டு அடுப்பை அணைக்கவும். பிறகு மூடியைத் திறந்து வெந்த அரிசியோடு சர்க்கரை, ஏலக்காய்த்தூள், நெய், முந்திரி, பாதாம் தேங்காய்த்துருவல் சேர்த்து கிளறி இறக்கிப் பரிமாறவும். செட்டிநாடு விசேஷங்களில் தவறாமல் இடம்பிடிக்கும் உணவு இது.

No comments:
Post a Comment