Monday, 3 October 2016

கரண்டி ஆம்லெட் பணியாரம்

கரண்டி ஆம்லெட் பணியாரம்

கரண்டி ஆம்லெட் பணியாரம்

 

தேவையானவை:

 

முட்டை - 2

வெங்காயம் - 1

(பொடியாக நறுக்கிக்கொள்ளவும்)

பச்சை மிளகாய் - 1

மஞ்சள்தூள் - 1/4 டீஸ்பூன்

மிளகுத்தூள் - 1 டீஸ்பூன்

உப்பு - தேவையான அளவு

எண்ணெய் - 1/2 டேபிள்ஸ்பூன்

 

செய்முறை :

 

இரண்டு முட்டைகளையும் ஒரு பாத்திரத்தில் உடைத்து ஊற்றவும். இதில் மஞ்சள்தூள், உப்பு, நறுக்கிய பச்சை மிளகாய், வெங்காயம், மிளகுத்தூள் எல்லாவற்றையும் சேர்த்து நன்றாகக் கலக்கவும். பிறகு பணியாரச்சட்டியை வைத்துசூடானதும் இரண்டு சொட்டு எண்ணெய் விட்டு சூடானதும், இதில் கலந்து வைத்திருக்கும் முட்டைக்கலவையை ஊற்றவும். இரண்டுபுறமும் திருப்பிவிட்டு, நன்றாக வெந்ததும் பரிமாறலாம்.

 

 

No comments:

Post a Comment