கறிகோலா கவுனி பணியாரம்
கறிகோலா கவுனி பணியாரம்
ஸ்டஃபிங் செய்ய :
எலும்பில்லாத கறி (மட்டன்) - 150 கிராம்
சிவப்பு மிளகாய் - 2
வறுகடலை (பொட்டுக்கடலை) - 1 டேபிள்ஸ்பூன்
முந்திரிப்பருப்பு - 4
பெருஞ்சீரகம் - 1 டீஸ்பூன்
துருவிய தேங்காய் - 2 டேபிள்ஸ்பூன்
சிறிய வெங்காயம் - 5
பூண்டு - 6 பல்
ஏலக்காய் - 1
இலவங்கப்பட்டை - அரை அங்குலம்
கிராம்பு - 1
கறிவேப்பிலை - சிறிதளவு
முட்டை - 1
உப்பு - தேவையான அளவு
எண்ணெய்- தேவையான அளவு
இஞ்சி - சிறிதளவு
செய்முறை :
ஒரு கடாயில் எண்ணெய் சேர்த்து சூடானதும், இலவங்கப்பட்டை, ஏலக்காய், கிராம்பு, கறிவேப்பிலை, இஞ்சி, பூண்டு, வெங்காயம், சிவப்பு மிளகாய், முந்திரி, பெருஞ்சீரகம் எல்லாவற்றையும் சேர்த்து வதக்கவும். இதில் துருவிய தேங்காய் சேர்க்கவும். இதில் வறுகடலையையும் சேர்த்து நன்றாகக் கிளறவும். முழுவதும் வதங்கியதும் அடுப்பை அணைத்து விடலாம்.
இன்னொரு கடாயில் எண்ணெய் ஊற்றி, நன்றாக நறுக்கிய மட்டன் போட்டு, தேவையான அளவு தண்ணீர் சேர்த்து அரைவேக்காடாக வேகவைத்துக் கொள்ளவும். கிளறி வைத்திருக்கும் பருப்புக் கலவையை மிக்ஸியில் அரைத்துக் கொள்ளவும். இந்தக் கலவையை, வேக வைத்த கறியுடன் சேர்த்து, உப்பு சேர்த்துக் கிளறவும். தேவைப்பட்டால், சிறிதளவு தண்ணீரைத் தெளித்துக் கொள்ளலாம். கலவையில் முட்டையையும் சேர்க்கவும். இதுதான் கோலா.
பேட்டர் செய்ய தேவையானவை :
கவுனி அரிசி - 2/3 கப்
புழுங்கல் அரிசி - 1/3 கப்
துவரம் பருப்பு - 1 கப்
கடலைப்பருப்பு - 1/4 கப்
முழு உளுத்தம் பருப்பு - 1/4 கப்
சிவப்பு மிளகாய் - 3
உடைத்த முந்திரிப்பருப்பு - 1/2 கப்
துருவிய தேங்காய் - 1/4 கப்
பச்சை மிளகாய் - 1
உப்பு - சிறிதளவு
கறிவேப்பிலை - சிறிதளவு
எண்ணெய் - தேவையான அளவு
பெருங்காயம் - சிறிதளவு
செய்முறை:
அரிசி மற்றும் பருப்பு வகைகளை தண்ணீரில் நன்றாகக் கழுவிக்கொள்ளவும். பின்னர் அதில் சிவப்பு மிளகாய் சேர்த்து மூன்று மணி நேரம் வரை ஊற வைக்கவும். பின்னர், அந்த நீரை வடிகட்டவும். சிறிதளவு பெருங்காயம், உப்பு, தேங்காய் எல்லாம் சேர்த்து இட்லி மாவு பதத்துக்கு அரைக்கவும். பணியார கல்லைச் சூடுபடுத்தி 1/4 டீஸ்பூன் எண்ணெய் விட்டு, மாவை பாதி குழி வரை ஊற்றி, கோலாவை ஸ்டஃபாக வைத்து, அதன் மீது மீண்டும் மாவை ஊற்றி, இரண்டு புறமும் நன்றாக வேகும் வரை வைத்து இறக்கிவிடலாம். இதனை தேங்காய் சட்னி அல்லது காரச் சட்னியுடன் பரிமாறலாம்.
No comments:
Post a Comment